மகா சிவராத்திரி 2026: அரிய ராஜயோகங்கள் உருவாகும் நாள் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

இந்த அரிய யோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.


மகா சிவராத்திரி 2026: அரிய ராஜயோகங்கள் உருவாகும் நாள் – 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது!

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி மகா சிவராத்திரி அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த புனித நாளில் சதுர்கிரஹி, புதாதித்ய மற்றும் சர்வார்த்த சித்தி போன்ற பல சுப யோகங்கள் உருவாகும் என ஜோதிடர்கள் தெரிவிக்கின்றனர். இந்த அரிய யோகங்களின் தாக்கத்தால் சில ராசிக்காரர்களுக்கு சிறப்பு பலன்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த மகா சிவராத்திரி காலத்தில் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. திடீர் பணவரவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதுடன், பொருளாதார நிலை மேம்படும். மன அழுத்தங்கள் குறைந்து, மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் என்றும் ஈசனின் அருள் கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அதேபோல், கன்னி ராசிக்காரர்களுக்கும் இந்த காலம் சுபபலன்களை தரக்கூடியதாக கருதப்படுகிறது. தொழில் துறையில் முன்னேற்றம் கிடைக்கும் வாய்ப்பு காணப்படுவதுடன், வருமானம் அதிகரிக்கும் சாத்தியமும் உள்ளது. புதிய தொழில் முயற்சிகளை தொடங்கும் வாய்ப்பும் உருவாகலாம். மேலும் வியாபாரத்தில் நல்ல ஒப்பந்தங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக அமையும் என ஜோதிடர்கள் குறிப்பிடுகின்றனர். அதிர்ஷ்டம் அதிகரித்து, புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபார முன்னேற்றம் காணப்படும் என்றும் வெளிநாட்டு வேலை தொடர்பான கனவுகள் நனவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இதனுடன் உடல்நலத்திலும் முன்னேற்றம் காணப்படலாம் என கூறப்படுகிறது.

இந்த தகவல்கள் அனைத்தும் ஜோதிடக் கருத்துக்கள், மத நூல்கள் மற்றும் பஞ்சாங்கங்களை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும், தகவல் பகிர்வதே நோக்கம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க