சிறுமி குடும்பத்துடன் கொலை: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் – குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு

Published on: 20 Aug 2026, 09:55 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

காசா சிறுமி ஹிந்த் ரஜப் கொலைக்கு இஸ்ரேல் பொறுப்பேற்று விசாரணை அறிவித்துள்ளது.

சிறுமி குடும்பத்துடன் கொலை: ஒப்புக்கொண்ட இஸ்ரேல் – குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு

காசாவில் 5 வயது சிறுமி ஹிந்த் ரஜப் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்த காரை நோக்கி 335 தோட்டாக்கள் சுட்டதை இஸ்ரேல் ராணுவம் முதல் முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 

காயமடைந்த ஹிந்த், ரெட் கிரசண்ட்டுக்கு போனில் மணிக்கணக்கில் உதவி கேட்ட அழுகைக் குரல் உலகையே உலுக்கியது. அவளை மீட்க வந்த இரண்டு மருத்துவப் பணியாளர்களும் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர். 

இந்த சம்பவம் உட்பட, மார்ச் 2025-ல் 15 பாலஸ்தீனியர்கள் (மருத்துவர்கள், ஐநா ஊழியர்) கொல்லப்பட்ட சம்பவம் குறித்தும் குற்றவியல் விசாரணை நடத்தப்படும் என IDF அறிவித்துள்ளது. 

இருப்பினும், இஸ்ரேலின் உள் விசாரணைகள் நம்பகமானவை அல்ல என ஹிந்த் அறக்கட்டளையும், மனித உரிமை அமைப்புகளும் குற்றம்சாட்டுகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW