கனடாவை விட்டு விரைவில் வெளியேறும் புலம்பெயர்ந்தோர் – புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
கனடாவுக்கு புலம்பெயர்ந்து வரும் மக்களில், உயர்கல்வி பெற்றும் திறன்மிக்கவர்களே நாட்டை மிக விரைவாக விட்டு வெளியேறி வருவதாக புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது.
தற்காலிக குடியிருப்பு அனுமதிகள் எண்ணிக்கையை குறைக்க கனடா அரசு சமீபத்தில் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. 2026க்கான இலக்கு 516,000 இருந்து 385,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 2027 மற்றும் 2028 ஆண்டுகளில் வருடத்திற்கு 370,000 பேருக்கு மட்டுமே தற்காலிக அனுமதி வழங்கப்படும்.
ஆனால், உண்மையான சவாலாக உயர்திறன் புலம்பெயர்ந்தோரின் நட்டமே முன்னிலைப்படுகிறது. Institute for Canadian Citizenship (ICC) வெளியிட்ட ஆய்வில், கனடாவில் நிரந்தர குடியிருப்பு பெற்றவர்களில் 20% பேர் 25 ஆண்டுகளுக்குள் நாட்டை விட்டுச் செல்கிறார்கள் என கூறப்படுகிறது.
முனைவர் பட்டம் பெற்றவர்களே கனடாவை அதிக வேகத்தில் விட்டு வெளியேறுவதாக ஆய்வு வலியுறுத்துகிறது.
ICC தலைவர் டேனியல் பெர்னார்ட், திறமை மற்றும் தகுதிக்கு தேவையான அங்கீகாரம் கிடைக்காததே புலம்பெயர்ந்தவர்கள் கனடாவை விட்டு வெளியேற காரணமாகின்றது எனத் தெரிவித்தார். இது கனடாவின் பொருளாதாரத்துக்கு நீண்டகாலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
பலர் தங்கள் சொந்த நாடுகளில் முக்கிய துறைகளில் சிறந்தவர்களாக இருந்தும், கனடாவில் சரியான வாய்ப்புகள் இல்லாததால் வேறு நாடுகளுக்குச் செல்லும் நிலை உருவாகியுள்ளது.
கனடா திறன்மிக்க புலம்பெயர்ந்தோரை தக்கவைக்க உடனடி கொள்கை மாற்றங்களை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது என ஆய்வு எதிர்வுகூறுகிறது.
Editorial Staff