தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய 19 வயது கல்லூரி மாணவி!

அந்த இளம்பெண் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலைக்கும் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவர் கர்ப்பமாகியுள்ளார்.


தனக்கு தானே பிரசவம் பார்த்து குழந்தையை ஜன்னல் வழியாக வீசிய 19 வயது கல்லூரி மாணவி!

இந்தியா - கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், வந்தனம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரகசியமாகப் பிரசவம் பார்த்து, தனது குழந்தையை ஜன்னல் வழியாக வெளியே வீசியுள்ள கொடூரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் நடந்தது எப்படி? 

கடும் வயிற்றுவலி காரணமாக வந்தனம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண், ஒருநாள் இரவு கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு அவருக்குக் குழந்தை பிறந்துள்ளது. 

அக்குழந்தையைக் கொல்லும் நோக்கில், கழிவறையின் காற்றோட்ட ஜன்னல் வழியாக வெளியே வீசிவிட்டு, எதுவுமே நடக்காதது போலத் தனது வார்டுக்குச் சென்று படுத்துக் கொண்டார். 

மருத்துவமனை வளாகத்தில் குழந்தை கிடப்பதைக் கண்ட ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, குழந்தையை மீட்டுப் பச்சிளம் குழந்தைகள் பராமரிப்பு வார்டில் சேர்த்தனர்.

யார் இந்தக் குழந்தையின் தாய் என்று ஊழியர்கள் விசாரணை நடத்தியதில், வயிற்று வலிக்குச் சிகிச்சை பெற்று வந்த அந்த 19 வயது இளம்பெண்ணே குழந்தையை ஈன்றெடுத்து வீசியது தெரியவந்தது. 

பொலிஸார் நடத்திய விசாரணையில், "தனக்குக் கர்ப்பமான விவரம் தெரியாது என்றும், ஏதோ உடல் நலக் குறைவு காரணமாக வயிறு வீங்கியிருப்பதாக நினைத்ததாகவும்" அந்தப் பெண் கூறியுள்ளார்.

 அந்த இளம்பெண் கல்லூரியில் படித்துக் கொண்டே பகுதி நேர வேலைக்கும் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவருடன் ஏற்பட்ட பழக்கத்தால் அவர் கர்ப்பமாகியுள்ளார். பின்னர் அந்த வாலிபர் பிரிந்து சென்றுவிட, தனக்கு ஏற்பட்ட உடல் மாற்றங்களைத் தனது குடும்பத்தினரிடம் இருந்து மறைத்து வந்துள்ளார். 

அவரது தாயார் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால், தந்தை மற்றும் சகோதரியால் அவரது மாற்றத்தைக் கவனிக்க முடியாமல் போயுள்ளது.

மீட்கப்பட்ட குழந்தை தற்போது ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் (NICU) சிகிச்சை பெற்று வருகிறது. 

தனக்குப் பிறந்த குழந்தை வேண்டாம் என்று அந்த இளம்பெண், குழந்தைகள் நலக்குழுவிடம் கூறிவிட்டார். தற்போது அந்தப் பெண் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், அவரை மருத்துவமனையில் பொலிஸ் கண்காணிப்பில் வைத்துச் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க