அமெரிக்காவுக்கு நுழைவதில் புதிய விதிகள்: கனேடியர்கள் குழப்பத்தில்!

Published on: 10 Dec 2025, 06:40 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கனேடிய சட்ட நிபுணர்கள், அமெரிக்க எல்லைக்கு செல்லும் போது எந்த விதமான சோதனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர்.

அமெரிக்காவுக்கு நுழைவதில் புதிய விதிகள்: கனேடியர்கள் குழப்பத்தில்!

2025ஆம் ஆண்டு டிசம்பர் 26 முதல், அமெரிக்க ஐக்கிய நாடுகள் எல்லை கடந்து வரும் வெளிநாட்டவர்களுக்கு புதிய நுழைவு விதிகளை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாற்றம், குறிப்பாக கனடாவிலிருந்து அமெரிக்காவுக்கு பயணம் செய்யும் குடிமக்களிடையே குழப்பத்தை உருவாக்கியுள்ளது.

சமீபத்தில், பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த ஏஞ்சலா மற்றும் லீ ஃபாபர்ட் ஆகியோர் அமெரிக்காவின் வாஷிங்கடன் மாநிலத்திற்குள் நுழைந்தபோது, எல்லை அதிகாரிகள் லீயின் கைரேகைகள் மற்றும் புகைப்படத்தை பதிவு செய்தனர்.

இதற்காக அவரிடம் 30 அமெரிக்க டாலர் கட்டணமும் வசூலிக்கப்பட்டது. ஆனால், ஏஞ்சலாவிடம் “Secure Certificate of Indian Status” அட்டை இருந்ததால், அவரின் விவரங்கள் பதிவு செய்யப்படவில்லை.

இதேபோல், வின்னிபெக் நகரைச் சேர்ந்த Owa Schlaikjer மற்றும் Yvonne Fostey ஆகியோர், அமெரிக்கா செல்லும்போது சோதனைக்கு உள்ளாகலாம் என எதிர்பார்த்து, I-94 படிவத்தை முன்கூட்டியே பூர்த்தி செய்து கொண்டு சென்றனர். ஆனால், எல்லை அதிகாரிகள் அந்த படிவம் தேவையில்லை என்றும், அவர்கள் அமெரிக்காவுக்குள் சாதாரணமாக உள்ளே செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கனேடிய சட்ட நிபுணர்கள், அமெரிக்க எல்லைக்கு செல்லும் போது எந்த விதமான சோதனையையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். இருப்பினும், சிலர் இந்த குழப்பம் மற்றும் சோதனைகளால் தொல்லை அடைவதைத் தவிர்க்க, அமெரிக்கா செல்வதையே தவிர்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW