மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கைது

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவரை அம்பாறை சிறுவர் மற்றும் மகளிர் பணியகப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கல்வியியற் கல்லூரி விரிவுரையாளர் கைது

அம்பாறை அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் மாணவர்களுக்கு தகாத காணொளிகளைக் காட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த 55 வயதுடைய விரிவுரையாளர் ஒருவரை அம்பாறை பிரதேச சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகள் நேற்று (01.10.2026) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட விரிவுரையாளர் கல்லூரிப் பாடங்களுக்கான மதிப்பெண்களை வழங்கும் முக்கிய பொறுப்பில் இருந்துள்ளார். இந்த விவகாரம் குறித்து வெளியே முறைப்பாடு செய்தால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவதாக மாணவர்களை அவர் அச்சுறுத்தியுள்ளார்.

இதன் காரணமாக விரிவுரையாளரின் மிரட்டலுக்குப் பயந்த மாணவர்கள் எவ்வித முறைப்பாடும் செய்யாமல் மௌனம் காத்து வந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இச்சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் அம்பாறை மாவட்ட மகளிர் பணியக விசேட பொலிஸ் குழுவினர் சந்தேகநபரான விரிவுரையாளரைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (02.10.2026) அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க