பிக் பாஸ் விசித்ராவுக்கு ஏற்பட்ட நிலை... படுத்த படுக்கையில்... கவலையில் ரசிகர்கள்

தற்போது விசித்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.


பிக் பாஸ் விசித்ராவுக்கு ஏற்பட்ட நிலை... படுத்த படுக்கையில்... கவலையில் ரசிகர்கள்

தென்னிந்திய திரைப்படங்களில் நடனக் கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய நடிகை விசித்ரா, பின்னர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களிடம் தனித்த இடத்தை பெற்றார். தொடர்ந்து அவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு பெரும் வரவேற்பைப் பெற்றார். அந்த சீசனில் வயதில் மூத்த போட்டியாளராக இருந்தாலும் தன்னுடைய உறுதியான விளையாட்டு மற்றும் நேர்மையான பேச்சால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில், தற்போது விசித்ரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புகைப்படங்களில் கையில் சிகிச்சைக்கான சாதனம் பொருத்தப்பட்ட நிலையில் படுக்கையில் ஓய்வெடுத்து காணப்பட்டார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அவர் வெளியிட்ட பதிவில், “வலி நம் வாழ்க்கையை சிறிது நேரம் நிறுத்தி வைக்கலாம். ஆனால் மனித மனத்தின் வலிமையை அது நமக்கு உணர்த்துகிறது. ஒவ்வொரு தழும்பும் ஒரு போராட்டத்தின் வெற்றிக் கதையைச் சொல்கிறது” என குறிப்பிட்டுள்ளார்.

தகவலின்படி, அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் சென்னை எம்.ஜி.எம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் டாக்டர் மொஹந்தி தலைமையிலான மருத்துவக் குழுவின் மேற்பார்வையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. தற்போது அவர் ஓய்வில் இருந்து வருகிறார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க