கட்டாய கல்யாணம்.. அதுவும் 21 வயதிலா? – குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நீனாவின் உண்மைக் கதை

Published on: 06 Dec 2025, 08:25 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

'கேளடி கண்மணி'யில் எஸ்.பி.பி.க்கு மகளாக நடித்த நீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் குழந்தை நடிகையாக சுட்டிக்காட்டப்பட்டார். பேபி ஷாலினி, பேபி ஷாமிலி ஆகியோர் வருவதற்கு முன்பே, தொடர்ந்து பல படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.

கட்டாய கல்யாணம்.. அதுவும் 21 வயதிலா?  – குழந்தை நட்சத்திரமாக பிரபலமான நீனாவின் உண்மைக் கதை

"கட்டாய கல்யாணம்... அதுவும் இவ்வளவு சின்ன வயசிலா?" – இதுதான் அப்போதைய நீனாவின் உணர்வு. 'கேளடி கண்மணி', 'விடுகதை', 'அஞ்சலி' உள்ளிட்ட பல படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் இளம் நாயகியாகவும் திகழ்ந்தவர் நடிகை நீனா.

'கேளடி கண்மணி'யில் எஸ்.பி.பி.க்கு மகளாக நடித்த நீனா, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப் படங்களிலும் குழந்தை நடிகையாக சுட்டிக்காட்டப்பட்டார். பேபி ஷாலினி, பேபி ஷாமிலி ஆகியோர் வருவதற்கு முன்பே, தொடர்ந்து பல படங்களில் முக்கிய பாத்திரங்களில் நடித்தார்.

குறிப்பாக, 'அஞ்சலி' படத்தில் ஷாமிலிக்கு போட்டியாக நடித்த நீனா, தேசிய விருது ஷாமிலிக்கு வழங்கப்பட்டது என்றாலும், தனது திறமையை நிரூபித்தார். பின்னர் 'விடுகதை' படத்தில் பிரகாஷ் ராஜுக்கு ஜோடியாக லீட் ரோலில் நடித்து, ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

சினிமாவில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்த நீனா, ஒரு கட்டத்தில் சினிமாவிலிருந்து விலகி, சின்னத்திரைக்குத் திரும்பினார். 'சித்தி' சீரியல் அவரது புகழை மேலும் உயர்த்தியது. அதைத் தொடர்ந்து 'அண்ணாமலை' சீரியலிலும் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். அந்தக் காலகட்டத்தில் டாப் நடிகைகளில் ஒருவராக விளங்கினார்.

அப்போது அவருக்கு வயது 21. கையில் ஏராளமான ப்ராஜக்ட்டுகளுடன் பீக்கில் இருந்தார். அந்த நேரத்தில், அவரது அப்பா நீண்ட நாள் திட்டமிட்டு திருமணத்தை முடிவு செய்தார். நீனாவுக்கு அது விருப்பமில்லை என்றாலும், அப்பாவின் கண்டிப்பான முடிவு மாறவில்லை.

திருமண நாளில் நீனா அழுதுகொண்டே இருந்தார். முன்பு பெற்ற அட்வான்ஸ்களை அனைத்தும் திருப்பிக் கொடுத்த அவரது அப்பா, "எடுத்த முடிவு சரிதான்" என்று நீனா இன்று உறுதியாகக் கூறுகிறார்.

இப்போது 22 ஆண்டுகள் திருமணமாகி விட்டது. நீனா தன் குடும்பத்துடன் ஆஸ்திரேலியாவில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். அவருக்கு 20 வயது மகளும், 16 வயது மகனும் உள்ளனர். நீனா தற்போது ஆசிரியையாகப் பணியாற்றுகிறார். அவரது கணவர் ஒரு நல்ல நிறுவனத்தில் உயர் பதவியில் உள்ளார்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு, கணவர் மீண்டும் சினிமாவில் நடிக்க ஊக்குவிக்கிறார். ஆனால் நீனா, "குடும்பமும் வேலையும் எனக்குப் போதும்" என்று ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW