மாணவர்களுடன் உடல் உறவு கொண்டு குழந்தை பெற்ற கணித ஆசிரியைக்கு நேர்ந்த கதி

சிறுவர்களின் பெற்றோர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.


மாணவர்களுடன் உடல் உறவு கொண்டு குழந்தை பெற்ற கணித ஆசிரியைக்கு நேர்ந்த கதி

இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பாடசாலையில் கணித ஆசிரியையாகப் பணியாற்றிய 31 வயதான பெண்மணி ஒருவர், இரண்டு மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து வாழ்நாள் முழுவதும் கல்வித்துறையில் பணியாற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தெரிந்தவுடன் பாடசாலை நிர்வாகம் அவரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்தது. சிறுவர்களின் பெற்றோர் தாக்கல் செய்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணையின் போது, அந்த ஆசிரியை இரு மாணவர்களை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவர்களில் ஒரு சிறுவனுடனான உறவில் குழந்தை ஒன்றையும் பெற்றுள்ளது வெளிப்பட்டது.

இந்தக் குற்றங்களுக்காக 2024ஆம் ஆண்டு அவருக்கு 6½ ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. தற்போது அவர் அந்தத் தண்டனையை அனுபவித்து வருகிறார். இந்நிலையில், கல்வித்துறை அவருக்கு வாழ்நாள் முழுவதும் பாடசாலை அல்லது கல்வி நிறுவனங்களில் எந்தவொரு பணியிலும் ஈடுபடுவதற்குத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க