பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இணைந்த மகாநதி நடிகை சாத்திகா!

சின்னத்திரையில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இரண்டாவது பாகத்தில் புதிய பாத்திரமாக நடிகை சாத்திகா இணைந்துள்ளார்.


பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் இணைந்த மகாநதி நடிகை சாத்திகா!

சின்னத்திரையில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் இரண்டாவது பாகத்தில் புதிய பாத்திரமாக நடிகை சாத்திகா இணைந்துள்ளார். ‘மகாநதி’ தொடரில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமான அவர், தற்போது இந்த தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரின் முதல் பாகம் அண்ணன்-தம்பி உறவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டு பெரும் வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இரண்டாவது பாகம், அப்பா மற்றும் மகன்களுக்கிடையேயான பாசப்பிணைப்பை மையமாகக் கொண்டு கதையை நகர்த்தி வருகிறது. மகன்களுக்கு திருமணம் நடைபெற்று, மருமகள்கள் குடும்பத்தில் இணைந்த பிறகு நடைபெறும் சம்பவங்களே தற்போது கதையின் முக்கிய அம்சமாக உள்ளது.

இந்த தொடருக்கு பிரியா தம்பி திரைக்கதை மற்றும் வசனம் எழுத, டேவிட் சார்லி இயக்கி வருகிறார். 600 நாட்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், டிஆர்பி பட்டியலிலும் முன்னணியில் திகழ்கிறது.

முதல் பாகத்தில் நடித்த வெங்கட் ரங்கநாதன், ஸ்டாலின் முத்து, ஹேமா ராஜ் ஆகியோருடன் இரண்டாவது பாகத்தில் நடிகை நிரோஷா, விஜே தங்கவேல் கந்தசாமி, ஆகாஷ் பிரேம்குமார், சக்தி, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த தொடர் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

இந்நிலையில், தொடரில் ‘அஞ்சலி’ என்ற புதிய பாத்திரத்தில் நடிகை சாத்திகா அறிமுகமாகிறார். ‘மகாநதி’ தொடரில் ராகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அவரது வருகை கதையில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சாத்திகா ‘நான் மகான் அல்ல’, ‘வேழம்’, ‘நெஞ்சில் துணிவிருந்தால்’ போன்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க