ஒபாமா தம்பதியை குரங்காக அவமதிக்கும் காணொளி பகிர்வு – டிரம்ப் மீது அரசியல் சர்ச்சை!

Published on: 07 Feb 2026, 07:09 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

முதலில் இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது.

ஒபாமா தம்பதியை குரங்காக அவமதிக்கும் காணொளி பகிர்வு – டிரம்ப் மீது அரசியல் சர்ச்சை!

அமெரிக்க ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப், முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவையும் அவரது மனைவி மிஷெல் ஒபாமாவையும் அவமதிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இனவாத தன்மை கொண்ட காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் பகிர்ந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது.

அந்தக் காணொளியில், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறாமல் தடுக்க சதி நடந்திருக்கலாம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. காணொளியின் இறுதிப்பகுதியில் ஒபாமா தம்பதியை குரங்காக இழிவுபடுத்தும் விதமாக சித்தரிக்கப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவம் அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகிய இரு தரப்பினரிடமும் கடும் எதிர்ப்பையும் அரசியல் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அந்தக் காணொளி சமூக ஊடகத்திலிருந்து நீக்கப்பட்டது.

முதலில் இந்த விவகாரம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உண்மையல்ல என்று வெள்ளை மாளிகை தெரிவித்திருந்தது. ஆனால் பின்னர் அந்தக் காணொளி வெள்ளை மாளிகையில் பணியாற்றும் ஒருவரால் தவறுதலாக பதிவேற்றப்பட்டதாக விளக்கம் வழங்கப்பட்டது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW