வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை துன்புறுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது

பயணத்தின் போது சாரதி தமக்கு ஒழுங்கற்ற முறையில் தொந்தரவு செய்ததாக அந்த பெண் சுற்றுலா பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார்.


வெளிநாட்டு சுற்றுலா பெண்ணை துன்புறுத்திய முச்சக்கர வண்டி சாரதி கைது

பதுளை மாவட்டத்தில் உள்ள எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிட வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு தகாத முறையில் நடந்துகொண்டதாக குற்றச்சாட்டில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெர்மனியைச் சேர்ந்த 26 வயதுடைய இளம் பெண் சுற்றுலா பயணியாக இலங்கைக்கு வந்திருந்தார். அவர் எல்ல நீர்வீழ்ச்சியை பார்வையிடுவதற்காக குறித்த சாரதியின் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பயணத்தின் போது சாரதி தமக்கு ஒழுங்கற்ற முறையில் தொந்தரவு செய்ததாக அந்த பெண் சுற்றுலா பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் நுவரெலியா ஹாவாஎலிய பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய முச்சக்கர வண்டி சாரதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வெலிமடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க