“மூன்றாம் உலகப் போர் வருமா?” – பாபா வாங்காவின் 2026 கணிப்புகளால் மீண்டும் பரவும் அதிர்ச்சி

பல்கேரியாவின் உலகப் புகழ் பெற்ற தீர்க்கதரிசர் பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு உலகின் கிழக்குப் பகுதியில் பெரிய போர் வெடிக்கும் என்று முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது.


“மூன்றாம் உலகப் போர் வருமா?” – பாபா வாங்காவின் 2026 கணிப்புகளால் மீண்டும் பரவும் அதிர்ச்சி

பல்கேரியாவின் உலகப் புகழ் பெற்ற தீர்க்கதரிசர் பாபா வாங்கா 2026ஆம் ஆண்டு உலகின் கிழக்குப் பகுதியில் பெரிய போர் வெடிக்கும் என்று முன்கூட்டியே கணித்ததாக கூறப்படுகிறது. சமீபத்திய செய்திகளின் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானை தாக்கிய நிலையில், ஈரானும் பதிலடி அளித்து வருகிறது. பிப்ரவரி 28ஆம் தேதி ஒருங்கிணைந்த ராணுவ நடவடிக்கையில் ஈரான் உச்சபட்ச தலைவர் கொமேனி கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் போர் தீவிரமடைந்துள்ளது.

பாபா வாங்கா 1911ஆம் ஆண்டு பிறந்து 1996ஆம் ஆண்டு உயிரிழந்தவர். பார்வை மாற்றுத்திறனாளியான இவர், 5079 வரையிலான நிகழ்வுகளை கணித்துள்ளதாக கூறப்படுகின்றது. அவருடைய கணிப்புகளின்படி, 2026 ஆம் ஆண்டு போர் மற்றும் அழிவின் வருடமாக இருக்கும், குறிப்பாக உலகின் கிழக்குப் பகுதியில் பெரும் போர்க் கொடியை உருவாக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

மார்ச் முதல் ஏப்ரல் 2026க்குள் பயங்கரமான போர் நிகழக்கூடும்; இதில் ரஷ்யா மற்றும் அமெரிக்கா போன்ற சக்திவாய்ந்த நாடுகள் நேரடி எதிர்ப்பு நிலை ஏற்படும் என்றும் பாபா வாங்கா முன்கூட்டியே கூறியுள்ளார். இந்தப் போரால் ஐரோப்பா மற்றும் மேற்குப் பகுதிகளில் பெரும் பேரழிவு நிகழலாம் என்றும், ரஷ்யா வல்லரசாக உருவாகும் வாய்ப்பு இருக்கின்றது என்றும் அவர் கணித்தார்.

பாபா வாங்காவின் முந்தைய கணிப்புகள் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதல், இளவரசி டயானா மரணம், 2004 சுனாமி, ஒபாமா அதிபராக அமர்ந்தல் ஆகியவற்றை முன்னதாக அறிவித்ததாக அவரது ஆதரவாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த தகவல்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

பொறுப்பு துறப்பு:  பாபா வாங்காவின் கணிப்புகள் மற்றும் சம்பவங்கள் அடிப்படையில் மட்டுமே அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க