2026 பாடசாலை விடுமுறை அறிவிப்பு வெளியீடு: கல்வி அமைச்சு முக்கிய தகவல்
இந்த விடுமுறை காலம் முடிந்ததும், முதல் தவணையின் இரண்டாம் கட்ட வகுப்புகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும்
2026 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளின் விடுமுறை அட்டவணையை கல்வி அமைச்சு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி, முதல் தவணையின் முதல் கட்டம் பெப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு பெப்ரவரி 14 முதல் மார்ச் 2 வரை விடுமுறை வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந்த விடுமுறை காலம் முடிந்ததும், முதல் தவணையின் இரண்டாம் கட்ட வகுப்புகள் மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 10 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கல்வி நடவடிக்கைகளை முன்கூட்டியே திட்டமிட உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.