சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டில் இருந்து பெண் சடலம் மீட்பு

Published on: 14 Sep 2025, 08:47 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகத்துக்கிடமான முறையில் வீட்டில் இருந்து பெண் சடலம் மீட்பு

மாத்தளை, தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்துக்கிடமான உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் உறங்கியுள்ள நிலையில், நேற்று அதிகாலையில் நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்துள்ளார்.

இதனையடுத்து, பெண்ணின் கணவர், அவரை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ள நிலையில், வைத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW