18 ஆண்டுகளுக்குப் பின்னர் மகர ராசியில் நுழையும் ராகு: டிசம்பர் முதல் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு
18 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி மகர ராசிக்குள் நுழையும் ராகு பகவானால் சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கு ஏற்படவுள்ள அதிர்ஷ்ட பலன்கள் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகமாகக் கருதப்படும் ராகு பகவான், சுமார் 18 ஆண்டுகளுக்குப் பின்னர் எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கவுள்ளார். எப்போதும் பின்னோக்கிய வக்ர நிலையில் பயணிக்கும் ராகு, 18 மாதங்களுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுவது வழமையாகும்.
அதற்கமைய, சனி பகவானின் ஆட்சி வீடான மகர ராசியில் ராகு அடுத்த 18 மாதங்களுக்குப் பயணிக்கவுள்ளார். இந்தப் பெயர்ச்சியின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், குறிப்பாக சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கு இது மிகவும் சாதகமான பலன்களைத் தரவுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சிம்ம ராசி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி மிகவும் பயனுள்ளதாக அமையவுள்ளதுடன், அவர்கள் பல்வேறு நன்மைகளைப் பெறவுள்ளனர். தொழிலில் வெற்றியும் அதிக இலாபமும் கிடைப்பதுடன், வியாபாரிகளுக்கு எதிர்பாராத அளவில் வருமானம் உயரும் வாய்ப்புள்ளது. இதுவரை நிலவி வந்த நிதிப் பிரச்சினைகள் நீங்கி, முடங்கிக்கிடந்த பணம் கைக்கு வந்து சேரும் சூழல் உருவாவதால் பொருளாதார நிலை வழக்கத்தை விடச் சிறப்பாக இருக்கும்.
விருச்சிக ராசி
விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகுவின் இந்த மாற்றம் நேர்மறையான பலன்களைத் தரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. புதிய முதலீடுகளின் ஊடாகச் சிறந்த இலாபம் கிடைப்பதுடன், வணிகர்களுக்கு எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். மாணவர்களுக்குக் கல்வி நடவடிக்கைகளில் சிறப்பான காலமாக இது அமையும். மேலும், திட்டமிட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியடைவதுடன், மனக்குழப்பங்கள் நீங்கி பண வரவு அதிகரிக்கும்.
மீன ராசி
மீன ராசிக்காரர்களுக்கு இந்த ராகு பெயர்ச்சி பொற்காலமாக அமையவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் குறிப்பிடுகின்றன. நீண்டகாலமாகத் தொடர்ந்து வந்த ஆரோக்கியப் பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதுடன், குடும்பத்தில் தாயாருடன் மகிழ்ச்சியான நேரத்தைச் செலவிடும் வாய்ப்புக் கிட்டும். மாணவர்களுக்குப் படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். அதேவேளை, வியாபாரத்தை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும், பணிபுரிபவர்களுக்குத் தமது செயல்திறனுக்கான பாராட்டுக்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.