வீட்டில் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் பொருட்கள் எவை தெரியுமா?

சீனாவின் பாரம்பரிய ஃபெங் சூயி சாஸ்திரத்தின் படி வீட்டில் நேர்மறை ஆற்றலையும் செல்வச் செழிப்பையும் அதிகரிக்கும் சிரிக்கும் புத்தர், காற்று மணிகள், ஆமைச் சிலை, சீன நாணயங்கள் மற்றும் மூங்கில் செடி ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக அறிந்து கொள்ளுங்கள்.


வீட்டில் செல்வத்தையும் அதிர்ஷ்டத்தையும் அதிகரிக்கும் பொருட்கள் எவை தெரியுமா?

சீனாவில் பிரபலமான பாரம்பரிய நம்பிக்கையான ஃபெங் சூயி சாஸ்திரத்தின் படி, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து நிதி நிலையை மேம்படுத்தக்கூடிய அதிர்ஷ்டப் பொருட்கள் குறித்து பல்வேறு முக்கிய விடயங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தியாவின் வாஸ்து சாஸ்திரத்தைப் போன்றே சீனாவில் பின்பற்றப்படும் இந்த நடைமுறை, வீட்டின் சூழலைச் செழிப்பாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதாக நம்பப்படுகிறது.

ஃபெங் சூயி சாஸ்திரத்தின் பிரகாரம், வீட்டின் தென்கிழக்கு திசையில் சிரிக்கும் புத்தர் சிலையை வைப்பது நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதுடன், செல்வத்தை மேம்படுத்தி மகிழ்ச்சியைக் கொண்டுவரும் எனக் கூறப்படுகிறது. அதேபோன்று, வீட்டின் பிரதான கதவு மற்றும் ஜன்னல்களுக்கு அருகில் காற்று மணிகளைத் தொங்கவிடுவதன் மூலம், காற்றினால் எழும் ஓசை வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பெருக்கி செல்வச் செழிப்பை ஏற்படுத்தும் என்பது ஐதீகமாகும்.

மேலும், இந்த சாஸ்திரத்தில் ஆமையின் சிலை மகிழ்ச்சி, செல்வம் மற்றும் செழிப்பை வழங்கும் மங்களகரமான பொருளாகக் கருதப்படுகிறது. உலோகத்திலான ஆமைச் சிலையை வீட்டில் வைப்பதன் மூலம் வாஸ்து குறைபாடுகள் நீங்குவதுடன், குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் மேம்பட்டு எதிரிகளை வெல்ல முடியும் என நம்பப்படுகிறது. குறிப்பாக, வீட்டில் செல்வம் அதிகரிக்க கண்ணாடி ஜாடியில் நீரை நிரப்பி அதில் ஆமைச் சிலையை வைப்பது சிறந்தது எனக் குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, ஃபெங் சூயி எனப்படும் சீன நாணயங்களை வீட்டின் நுழைவாயிலில் தொங்கவிடுவதால் வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பதுடன், தொழிலிலும் வெற்றி கிட்டும் என நம்பப்படுகிறது. பணியிடங்களில் உள்ள மேசை இழுப்பறையில் பத்து சீன நாணயங்கள் கொண்ட தொகுப்பை வைப்பதும் நற்பலன்களைத் தரும். அத்துடன், வீட்டில் மூங்கில் செடியை வளர்ப்பதும் நேர்மறை ஆற்றல், மகிழ்ச்சி மற்றும் நல்ல அதிர்ஷ்டத்தைக் கொண்டுவரும் மங்களகரமான விடயமாக ஃபெங் சூயி சாஸ்திரத்தில் கருதப்படுகிறது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க