18 ஆண்டுகளின் பின்னர் மகர ராசிக்குப் பெயர்ச்சியாகும் ராகு பகவான்: அடுத்த 18 மாதங்களுக்கு 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு

வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2026 நவம்பர் 13 ஆம் திகதி ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகின்றார்.


18 ஆண்டுகளின் பின்னர் மகர ராசிக்குப் பெயர்ச்சியாகும் ராகு பகவான்: அடுத்த 18 மாதங்களுக்கு 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்பு

ஜோதிடத்தில் நிழல் கிரகங்களாகக் கருதப்படும் ராகு மற்றும் கேது ஆகியவற்றின் பெயர்ச்சி முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது. இதற்கமைய, வாக்கிய பஞ்சாங்கத்தின் படி 2026 நவம்பர் 13 ஆம் திகதி ராகு பகவான் கும்ப ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகின்றார். இந்த ராகு பெயர்ச்சியினால் அடுத்த 18 மாதங்களுக்குச் சில ராசிக்காரர்களின் வாழ்வில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் என ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, சிம்மம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகிய மூன்று ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக டாக்டர் சிவஸ்ரீ மணிகண்டசிவம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கணித்துள்ளார்.

திடீர் மாற்றங்கள், எதிர்பாராத வாய்ப்புகள், வெளிநாட்டுத் தொடர்புகள், தொழில்நுட்பம் மற்றும் எதிரிகளை வெல்லும் திறன் ஆகியவற்றுடன் தொடர்புடைய ராகு பகவானின் சாதகமான நிலை, ஒருவருக்குப் புதிய வாய்ப்புகளையும் சவால்களை எதிர்கொள்ளும் மனவலிமையையும் வழங்கும் என நம்பப்படுகின்றது. இதன் மூலம் எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் குறைதல், வருமானம் அதிகரித்தல், திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி மற்றும் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறுதல் போன்ற சாதகமான பலன்களை இந்த மூன்று ராசிக்காரர்களும் பெறவுள்ளனர்.

சிம்ம ராசியினருக்கு ஆறாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் எதிரிகளை வெல்லும் வாய்ப்புகள் உருவாகும். நீண்ட நாட்களாக எதிராகச் செயல்பட்டு வந்தவர்கள் விலகிச் செல்வதுடன், சில சந்தர்ப்பங்களில் அவர்களே ஆதரவாக மாறும் சூழலும் ஏற்படலாம். பணியிடத்தில் காணப்பட்ட போட்டி, பொறாமை மற்றும் தேவையற்ற எதிர்ப்புகள் நீங்கி சாதகமான மாற்றங்கள் ஏற்படுவதுடன், மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றியும் கிட்டும். பொருளாதார ரீதியாக வருமானம் அதிகரித்தல், நிலுவையிலிருந்த பணம் கைக்கு வருதல் மற்றும் தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் காணுதல் ஆகிய நன்மைகளை எதிர்பார்க்கலாம். மேலும், உடல்நலம் தொடர்பாகக் கவலைப்பட்டு வந்தவர்களுக்குச் சரியான சிகிச்சை மற்றும் தீர்வுகள் கிடைத்து மனநிம்மதி ஏற்படும்.

விருச்சிக ராசியினருக்கு தைரியம், முயற்சி, சகோதர உறவுகள், தகவல் தொடர்பு மற்றும் பயணங்களைக் குறிக்கும் மூன்றாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கின்றார். இதனால் குடும்ப வாழ்க்கையில் நீண்ட நாட்களாக நிலவிய பிரச்சினைகள் படிப்படியாகக் குறையும். திருமணமாகாதவர்களுக்குத் திருமண முயற்சிகள் கைகூடுவதுடன், தம்பதிகளிடையே புரிதலும் நெருக்கமும் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைப்பதுடன் சகோதர சகோதரிகளுடனான கருத்து வேறுபாடுகள் நீங்கி உறவுகள் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகளும் எதிர்பாராத பணவரவும் ஏற்படுவதுடன் நீண்ட நாள் கனவுகள் நனவாகும் சூழலும் உருவாகும். எனினும், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் தனிப்பட்ட மகிழ்ச்சிகளை எல்லோரிடமும் பகிராமல் கவனமாகச் செயல்படுவது சிறந்தது என அறிவுறுத்தப்படுகின்றது.

மீன ராசியினருக்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டில் ராகு சஞ்சரிப்பதால் வருமானம், ஆசைகள் நிறைவேறுதல் மற்றும் சமூக வட்டாரம் ஆகியவற்றில் சாதகமான மாற்றங்கள் நிகழும். நீண்ட நாட்களாகத் திருமணத்திற்காகக் காத்திருப்போருக்கு நல்ல வரன் அமைவதுடன், கணவன் மனைவிக்கிடையிலான அன்பும் நெருக்கமும் மேம்படும். புதிய நண்பர்கள் மூலம் சமூக வட்டாரம் விரிவடைவதுடன், திறமைகளுக்கு உரிய அங்கீகாரமும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் உருவாவதுடன், ஏற்கனவே செய்து வரும் தொழிலுடன் கூடுதலாக மற்றுமொரு தொழிலைத் தொடங்க நினைப்போருக்குச் சாதகமான சூழல் அமையும். எதிர்பாராத பணவரவு மற்றும் புதிய வருமான வழிகள் மூலம் பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டு, அடுத்த 18 மாதங்களும் மீன ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியும் வளர்ச்சியும் நிறைந்த காலமாக அமையும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க