சூரியன் மற்றும் செவ்வாய் கிரகப் பரிமாற்றத்தால் உருவாகும் அரிய யோகம்; மூன்று ராசிகளுக்குச் சாதகமான பலன்கள்

2026 டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ள இந்த அரிய கிரகச் சேர்க்கையால் மேஷம், கடகம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் தொழில் முன்னேற்றத்தையும் பெறவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.


சூரியன் மற்றும் செவ்வாய் கிரகப் பரிமாற்றத்தால் உருவாகும் அரிய யோகம்; மூன்று ராசிகளுக்குச் சாதகமான பலன்கள்

ஜோதிட சாஸ்திரத்தில் நவகிரகங்களின் அரசனாகக் கருதப்படும் சூரியன், கடந்த நவம்பர் 16 ஆம் திகதி விருச்சிக ராசிக்குள் பிரவேசித்ததன் ஊடாகத் தனது பலவீனமான நிலையிலிருந்து விடுபட்டுள்ளார்.

விருச்சிக ராசியின் அதிபதியான செவ்வாய், சூரியனின் ராசியான சிம்ம ராசியில் சஞ்சரிப்பதால், செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் சூரியனும், சூரியனின் வீடான சிம்மத்தில் செவ்வாயும் அமர்ந்து 'ராசி பரிவர்த்தன யோகம்' எனப்படும் அரிய கிரகப் பரிமாற்ற நிலையை உருவாக்கியுள்ளனர்.

2026 டிசம்பர் 16 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ள இந்த அரிய கிரகச் சேர்க்கையால் மேஷம், கடகம் மற்றும் மகரம் ஆகிய மூன்று ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி ஆதாயங்களையும் தொழில் முன்னேற்றத்தையும் பெறவுள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

மேஷ ராசிக்காரர்களுக்கு சூரியன் மற்றும் செவ்வாயின் இந்தச் சேர்க்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. மேஷ ராசியின் ஐந்தாம் வீட்டு அதிபதியான செவ்வாய் கேதுவுடன் இணைந்திருப்பதுடன், சூரியன் எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கின்றார். இந்தக் கிரக அமைப்பினால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைப்பதுடன், வருமானத்திற்கான புதிய வழிகள் உருவாகி பொருளாதார நிலை வலுப்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திட்டங்கள் மற்றும் பொறுப்புக்கள் மூலம் நற்பெயர் அதிகரிப்பதுடன், நீண்டகாலமாக நிலவி வந்த நிதிச் சிக்கல்கள் முடிவுக்கு வந்து ஆசைகள் நிறைவேறும். திருமண வாழ்வில் அன்பும் பரஸ்பர மரியாதையும் அதிகரிக்கும் எனவும், உடல் மற்றும் மன ஆரோக்கியம் சீராக அமைந்து வியாபாரிகளுக்குப் பெரும் இலாபம் கிடைக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

கடக ராசிக்காரர்களுக்கு இக்காலப்பகுதியில் பல சாதகமான மாற்றங்கள் நிகழவுள்ளன. நிதி நிலைமை படிப்படியாக மேம்படுவதுடன், புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகி முயற்சிகளுக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். பரிவர்த்தன யோகத்தின் செல்வாக்கால் தொழில் துறையில் பாரிய முன்னேற்றம் ஏற்படுவதுடன், பணியிடத்தில் திறமையை வெளிப்படுத்தி உயர் பதவிகளை அடையும் வாய்ப்பு உருவாகும். வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் புகழும் செல்வமும் கிடைப்பதோடு, சமூகத்தில் அந்தஸ்து, அதிகாரம் மற்றும் மதிப்பு உயர்ந்து தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகர ராசிக்காரர்களுக்கு இந்த அரிய கிரகச் சேர்க்கையானது நிதி மற்றும் தொழில் சார்ந்த விடயங்களில் சிறப்பான முன்னேற்றங்களைக் கொண்டுவரவுள்ளது. வருமானத்திற்கான புதிய வழிகள் திறக்கப்படுவதுடன், வணிக நடவடிக்கைகள் வேகமெடுத்து ஒட்டுமொத்த நிதி நிலைமையும் மேம்படும்.

சமூகத்தில் அந்தஸ்து உயர்வதுடன் செல்வாக்கு மிக்க நபர்களின் தொடர்புகள் கிடைக்கும். பல்வேறு முதலீடுகள் மூலம் சிறந்த வருமானம் ஈட்டும் வாய்ப்புக்களும், சூரியனின் செல்வாக்கால் சம்பள உயர்வும் கிடைக்கக்கூடும். புதிய முயற்சிகள் மற்றும் புதிய வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு இது உகந்த காலப்பகுதியாக அமைவதுடன், இக்காலம் முழுவதும் மிகுந்த உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயற்பட முடியும் என ஜோதிடக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க