கணவர் போட்டோவை டெலிட் செய்த 'ரோஜா' பிரியங்கா.. குட்டி உடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

Published on: 28 Mar 2026, 06:13 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

சன் டிவியின் 'ரோஜா' சீரியல் புகழ் பிரியங்கா நல்காரி, இன்ஸ்டாகிராமில் தனது கணவரின் புகைப்படங்களை நீக்கியுள்ள நிலையில், குட்டி உடையில் ஒரு புதிய புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இது ரசிகர்களிடையே விவாகரத்து வதந்திகளையும், அவரது மீண்டு வரவு குறித்த எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

கணவர் போட்டோவை டெலிட் செய்த 'ரோஜா' பிரியங்கா.. குட்டி உடையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

சின்னத்திரையில் மிகக் குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியைக் கண்ட நடிகைகளில் ஒருவர் பிரியங்கா நல்காரி. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ரோஜா' சீரியலில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாடு முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார்.

2018-ம் ஆண்டு தொடங்கி 2022-ம் ஆண்டு வரை சுமார் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக ஓடிய இந்த சீரியல், டிஆர்பி ரேட்டிங்கில் (TRP Rating) உச்சத்திலிருந்தது. பிரியங்காவின் க்யூட்டான நடிப்பும், எதார்த்தமான முகபாவனைகளும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தன. இந்த சீரியல் அவருக்குப் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கித் தந்தது என்றே சொல்லலாம்.

சினிமா மற்றும் சீரியல் உலகில் உச்சத்திலிருந்த போதே, கடந்த 2023-ம் ஆண்டு ராகுல் வர்மா என்பவரை மலேசியாவில் உள்ள ஒரு கோவிலில் ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் பிரியங்கா. திருமணத்திற்குப் பிறகு மலேசியாவில் குடியேறிய அவர், இனி சீரியல்களில் நடிக்க மாட்டார் எனச் செய்திகள் பரவின.

ஆனால், ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நள தமயந்தி' என்ற தொடரின் மூலம் மீண்டும் சின்னத்திரையில் தடம் பதித்தார். அதே நேரத்தில், தனது கணவருடன் இணைந்து புதிய உணவகம் (Restaurant) ஒன்றையும் அவர் நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகின.

சமீபகாலமாகப் பிரியங்கா நல்காரியின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்துப் பல்வேறு வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. குறிப்பாக, அவர் தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்திலிருந்து கணவருடன் எடுத்த புகைப்படங்கள் அனைத்தையும் திடீரென நீக்கியது, இருவரும் விவாகரத்து பெறப் போகிறார்கள் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியது.

இந்தச் சூழலில், பிரியங்கா தற்போது குட்டி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் அவரை வர்ணிப்பதோடு மட்டுமல்லாமல், "மீண்டும் சீரியலுக்கு வாங்க, உங்களை ரொம்ப மிஸ் செய்கிறோம்" எனக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW