பெரு பயணத்தின் போது ஹெலிகொப்டர் விமானிகள் அறையில் அமர்ந்து பயணித்த பாப்பரசர் பதினான்காம் லியோ
பாப்பரசர் பதினான்காம் லியோ (Pope Leo XIV), பெரு (Peru) நாட்டிற்கான தனது விஜயத்தின் போது இரு விமானிகளுக்கும் இடையில் அமர்ந்து பயணித்த சுவாரஸ்யமான சம்பவம் பதிவாகியுள்ளது.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பதினான்காம் லியோ (Pope Leo XIV), பெரு (Peru) நாட்டிற்கான தனது விஜயத்தின் போது இராணுவ ஹெலிகொப்டரொன்றின் விமானிகள் அறைக்குள் (Cockpit) சென்று, இரு விமானிகளுக்கும் இடையில் அமர்ந்து பயணித்த சுவாரஸ்யமான சம்பவம் பதிவாகியுள்ளது.
கடந்த நவம்பர் 14 ஆம் திகதி, பெரு விமானப்படைக்குச் சொந்தமான எம்.ஐ-17 (MI-17) ரக இராணுவ ஹெலிகொப்டரில் பயணித்த போதே பாப்பரசர் இவ்வாறு விமானிகள் அறைக்குச் சென்றுள்ளார். அங்கு தனக்கு வழங்கப்பட்ட ஹெட்செட்டை (Headset) அணிந்துகொண்ட அவர், விமானத்தின் கட்டுப்பாட்டுக் கருவிகளையும் பறப்புச் செயற்பாடுகளையும் மிகுந்த ஆர்வத்துடன் அவதானித்துள்ளார்.
சுமார் 45 நிமிடங்கள் நீடித்த இப்பயணத்தின் போது, பாப்பரசர் விமானிகளுடன் உரையாடியவாறு சுற்றாடலை மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்வையிடும் காட்சிகள் கமெராவில் பதிவாகியுள்ளன. பெரு விமானப்படையினால் வெளியிடப்பட்டுள்ள இப்புகைப்படங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.
பெருவின் சிக்லாயோ (Chiclayo) நகரிலிருந்து கஜமார்கா (Cajamarca) பிராந்தியத்திலுள்ள சான்டா குரூஸ் டி சுச்சபாம்பா (Santa Cruz de Succhabamba) பகுதிக்குச் சென்ற போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் தனது நிகழ்வுகளை நிறைவு செய்த பின்னர், பாப்பரசர் அதே ஹெலிகொப்டரில் மீண்டும் சிக்லாயோ நகருக்குத் திரும்பியுள்ளார்.