இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் அதிகம் தோல்வி சந்திப்பார்களாம்… உங்கள் பிறந்த தேதி இதில் வருகிறதா?

சிலருக்கு காதல் வாழ்க்கை எளிதாக வெற்றி பெறுகிறது. ஆனால் சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், தொடர்ந்து காதல் முறிவுகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வருகிறார்கள்.
இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் காதலில் அதிகம் தோல்வி சந்திப்பார்களாம்… உங்கள் பிறந்த தேதி இதில் வருகிறதா?

காதல் என்பது மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒரு அழகான உணர்வு. காதல் மனிதனை உயரத்துக்கும் அழைத்துச் செல்லும், அதே நேரத்தில் ஆழமான வேதனையையும் கொடுக்கக்கூடியது. அதனால்தான் காதல் மனிதர்கள் அனுபவிக்கும் மிகச் சிக்கலான உணர்ச்சிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. சிலருக்கு காதல் வாழ்க்கை எளிதாக வெற்றி பெறுகிறது. ஆனால் சிலர் எவ்வளவு முயற்சி செய்தாலும், தொடர்ந்து காதல் முறிவுகளையும் ஏமாற்றங்களையும் சந்தித்து வருகிறார்கள்.

இதற்கு காரணம் அவர்களின் மனப்பான்மை மட்டுமல்ல, பிறந்த தேதியும் காரணமாக இருக்கலாம் என்று எண் கணிதம் கூறுகிறது. எண் கணிதத்தின் படி, ஒருவரின் பிறந்த தேதி அவர்களின் காதல் வாழ்க்கையில் முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் காதல் வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திக்க நேரிடலாம் என்றும், துரதிர்ஷ்டம் அவர்களை தொடர்ந்து துரத்தும் என்றும் நம்பப்படுகிறது.

எண் கணிதக் கோட்பாடுகளின்படி, அனைத்து மாதங்களிலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் பிறவி எண் 4-ஐச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் ராகு கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இயல்பாகவே இவர்கள் நடைமுறைக்கு ஒட்டிய, எதார்த்தமான சிந்தனை கொண்டவர்களாகவும், சில நேரங்களில் பிடிவாதமானவர்களாகவும் இருப்பார்கள். உறவுகளை உணர்ச்சிப்பூர்வமாக அணுகுவதற்குப் பதிலாக, லாஜிக்காக அணுகுவதால் காதலில் உணர்ச்சி குறைவு ஏற்படுகிறது. இதனால் துணைக்கு இவர்கள் உணர்ச்சியற்றவர்களாக அல்லது ஆதிக்கம் செலுத்துபவர்களாக தோன்றலாம். உணர்வுகளை வெளிப்படுத்த முடியாத இந்த இயல்பு, அவர்களின் உறவுகளில் சந்தேகங்களையும் மனவேதனைகளையும் உருவாக்கி, அடிக்கடி காதல் முறிவுகளுக்கு வழிவகுக்கிறது.

அதேபோல், அனைத்து மாதங்களிலும் 7, 16, 25 தேதிகளில் பிறந்தவர்கள் பிறவி எண் 7-க்கு உட்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் கேது கிரகத்தின் தாக்கத்தில் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் உள்முக சிந்தனை கொண்டவர்களாகவும், அதிகமாக தனக்குள் மூழ்கிக் கொள்வவர்களாகவும் இருப்பார்கள். தங்கள் உணர்ச்சிகளை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில் அதிக சிரமம் ஏற்படும். இதனால் அவர்களின் துணைக்கு புரியாத தன்மை உருவாகி, நம்பிக்கையின்மை மற்றும் மனமுரண்பாடுகள் தோன்றலாம். இந்த காரணங்களால் இவர்களின் காதல் உறவுகள் பெரும்பாலும் நீண்ட காலம் நிலைத்திருக்காமல் முடிவுக்கு வர வாய்ப்பு உள்ளது.

அனைத்து மாதங்களிலும் 8, 17, 26 தேதிகளில் பிறந்தவர்கள் பிறவி எண் 8-ஐச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுகிறார்கள். இவர்கள் சனி கிரகத்தின் ஆதிக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இயல்பாகவே இவர்கள் வாழ்க்கையில் உறவுகளை விட தொழில், இலட்சியங்கள் மற்றும் பொறுப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அவர்களின் கடுமையான மற்றும் கட்டுப்பாடான குணம், துணைக்கு மனஅழுத்தத்தை ஏற்படுத்தலாம். உணர்ச்சிகளை வெளிப்படுத்தத் தயங்குவதும், உறவுகளில் கூட பலன்களை எதிர்பார்ப்பதும் சிக்கல்களை உருவாக்கும். துணைக்கு தேவையான உணர்ச்சிப் பிணைப்பும் ஆதரவையும் வழங்காததால், இவர்களின் காதல் வாழ்க்கை தோல்விகளை சந்திக்கும் நிலைக்கு செல்லலாம்.

இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள தகவல்கள் பாரம்பரிய எண் கணித மற்றும் ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். 

சமூக வலைத்தளங்களில் பின்தொடர