பொருளாதாரத் தடைக்குப் பதிலடி: சுவிட்சர்லாந்தின் இராஜதந்திர அலுவலகத்தை மூட வடகொரியா உத்தரவு
வடகொரியா மீது சுவிட்சர்லாந்து பொருளாதாரத் தடைகளை விதித்துள்ள நிலையில், பியாங்யாங்கிலுள்ள சுவிட்சர்லாந்தின் இராஜதந்திர அலுவலகத்தை உடனடியாக மூடுவதற்கும் அதன் தலைவரை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கும் வடகொரியா உத்தரவிட்டுள்ளது.
வடகொரியா மீது சுவிட்சர்லாந்து பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளமைக்குப் பதிலடியாக, பியாங்யாங்கிலுள்ள சுவிட்சர்லாந்தின் இராஜதந்திர அலுவலகத்தை உடனடியாக மூடுமாறு வடகொரிய அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்குட்பட்ட உக்ரைன் பகுதிகளைச் சேர்ந்த சிறுவர்களுக்கு வடகொரியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவதாகக் கூறி, அந்நாட்டுக்கு எதிராக சுவிட்சர்லாந்து பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.
இதற்குப் பதிலடியாக, பியாங்யாங்கிலுள்ள சுவிட்சர்லாந்தின் இராஜதந்திர அலுவலகத்தை மூடுவதற்கும் அதன் தலைவரை நாட்டிலிருந்து வெளியேறுமாறும் வடகொரிய வெளிவிவகார அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன.
எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திரத் தொடர்புகள் தொடரும் என சுவிட்சர்லாந்தின் வெளிவிவகார அமைச்சு விளக்கமளித்துள்ளது.
இதன்படி, சீனத் தலைநகர் பீஜிங்கிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் மற்றும் சுவிட்சர்லாந்தின் பெர்ன் நகரிலுள்ள வடகொரியத் தூதரகம் ஆகியவற்றின் ஊடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளும் தொடர்புகளும் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத் தடைகள் தொடர்பாக ஏற்பட்டுள்ள இந்தக் கருத்து வேறுபாடு இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.