நேபாள வெள்ளத்தில் பலியான பெண்ணின் உடலில் நகை திருடிய கும்பல் ... உண்மை என்ன?

Published on: 27 Aug 2026, 06:55 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

நேபாளத்தில் ஏற்பட்ட கொடூர வெள்ளத்தில் 270-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில், கரை ஒதுங்கிய இறந்த பெண்ணின் உடலில் இருந்த தங்க நகைகளை இருவர் கழற்றிச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேபாள வெள்ளத்தில் பலியான பெண்ணின் உடலில் நகை திருடிய கும்பல் ... உண்மை என்ன?

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270-ஐத் தாண்டியுள்ள நிலையில், இந்த சோகத்திற்கு மத்தியில் மேலும் ஒரு மனதை உலுக்கும் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த ஒரு பெண்ணின் உடலில் இருந்த தங்க நகைகளை, கரைக்கு இழுத்து வந்து இரண்டு நபர்கள் கழற்றி எடுத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பெண்ணின் உடலில் முடியைப் பிடித்து இழுத்து வந்த அவர்கள், உடலை மீட்காமல் நகைகளை மட்டுமே கொள்ளையடிப்பது போன்ற அதிர்ச்சிகரமான காட்சிகள், பார்த்த அனைவரையும் கலங்க வைத்துள்ளன.

இந்த வீடியோ எப்போது, எங்கு எடுக்கப்பட்டது என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. என்றாலும், நேபாளத்தின் வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் இது போன்ற மனிதாபிமானமற்ற செயல்கள் நடப்பதாக பலர் சமூக ஊடகங்களில் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

நேபாளம்-திபெத் எல்லையில் பாயும் பொட்டேகோஷி ஆற்றில் ஏற்பட்ட பெருவெள்ளம், நுவாகோட், தாடிங், ரசுவா உள்ளிட்ட மாவட்டங்களை கடுமையாக பாதித்துள்ளது. பாலங்கள், வீடுகள், வாகனங்கள் என பல விஷயங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. கைலாய யாத்திரைக்கு சென்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகளும், நீர்மின் திட்டப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களும் வெள்ளத்தில் சிக்கித் தவித்தனர்.

நேபாள காவல்துறை வெளியிட்டுள்ள தகவலின்படி, உயிரிழப்பு 270 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், 500-க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளனர். இந்தியர்களின் நிலை குறித்தும் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 288 இந்தியர்கள் வெள்ளத்தில் மாயமாகியுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த 37 பேர் (முதல் குழு), 49 பேர் (இரண்டாம் குழு), மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 32 பேர் என பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி, 21 தமிழக இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகள் தீவிரமாக தொடர்ந்துகொண்டிருக்கும் இந்த சூழலில், இறந்தவரின் உடலை மீட்காது நகையை மட்டும் திருடும் செயல், "மனுஷனா இவங்க?" என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. நெட்டிசன்கள் பலரும், "இறந்த பெண்ணின் உடலை மீட்க வேண்டிய இடத்தில் நகைகளை மட்டுமே எடுத்துச் செல்வது மனிதத் தன்மையற்ற செயல்" என்றும், "அவர்கள் உடலை மீட்கிறார்கள் என்று நினைத்தேன், ஆனால் இது கொள்ளை" என்றும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இது போன்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது நேபாள போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW