குரு பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி, புகழ் குவியப்போகுது!

2026 மார்ச் 11 முதல் குரு பகவான் தனது நேர்கதி சஞ்சாரத்தைத் தொடங்குவதால், மேஷம், சிம்மம் உள்ளிட்ட 4 ராசிக்காரர்களுக்குப் பொற்காலம் ஆரம்பமாகவுள்ளது.


குரு பெயர்ச்சி 2026: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பதவி, புகழ் குவியப்போகுது!

ஜோதிட சாஸ்திரத்தில் முழு சுப கிரகமாகப் போற்றப்படும் குரு பகவான், வரும் 2026 மார்ச் 11 முதல் தனது வக்ர நிலை நீங்கி நேர்கதியில் பயணிக்கத் தொடங்குகிறார். இந்த நேர்கதி சஞ்சாரமானது டிசம்பர் 13, 2026 வரை நீடிக்கவுள்ளது. அதன் பிறகு குரு பகவான் சிம்ம ராசிக்கு நகர்ந்து மீண்டும் வக்ர நிலையை அடைவார்.

இந்த ஒன்பது மாத கால இடைவெளியில் குருவின் நேரடிப் பார்வை மற்றும் சஞ்சாரம் காரணமாகச் சில ராசிக்காரர்களின் வாழ்வில் தலைகீழ் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. குறிப்பாகத் தொழில் முடக்கம், நிதி நெருக்கடி மற்றும் குடும்பப் பிரச்சனைகளில் தவித்து வந்தவர்களுக்கு இந்த மாற்றம் ஒரு மிகப்பெரிய நிம்மதியைத் தரும்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு இந்த குருவின் நேர்கதி சஞ்சாரம் தொழில் ரீதியாக மிகப்பெரிய நன்மைகளை வாரி வழங்கப்போகிறது. கடந்த ஓராண்டு காலமாகப் பணியிடத்தில் நிலவி வந்த தேவையற்ற அழுத்தங்கள் குறைந்து, சுமூகமான சூழல் உருவாகும். பல ஆண்டுகளாகப் பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வுக்காகக் காத்திருந்தவர்களுக்கு இந்த மார்ச் மாதத்திற்குப் பிறகு நல்ல செய்தி தேடி வரும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தத் தருணம் 'தொட்டதெல்லாம் பொன்னாகும்' காலமாக அமையவுள்ளது. பல ஆண்டுகளாக உங்களை வாட்டி வந்த கடன் மற்றும் பணப் பிரச்சனைகள் படிப்படியாக விலகி, கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப காரியங்கள் தடையின்றி நடப்பதோடு, சமூகத்தில் உங்கள் அந்தஸ்தும் புகழும் உயரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்குக் குருவின் அருளால் எதிர்பாராத இடங்களில் இருந்து திடீர் பண வரவு உண்டாகும். நீண்ட நாட்களாக வசூலாகாமல் இருந்த பழைய பாக்கிகள் அல்லது கொடுத்த கடன் தொகைகள் இப்போது உங்கள் கைக்கு வந்து சேரும். நீதிமன்ற வழக்குகள் அல்லது சொத்துத் தகராறுகளில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசியினரைப் பொறுத்தவரை, மாணவர்களுக்கு இது ஒரு பொற்காலமாகும். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லத் திட்டமிடுபவர்களின் முயற்சி கைகூடும். மேலும், உங்களின் நீண்ட காலக் கனவான சொந்த வீடு அல்லது புதிய வாகனம் வாங்கும் ஆசை இந்த குருவின் நேர்கதி சஞ்சாரக் காலத்தில் நிறைவேற அதிக வாய்ப்புகள் உள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க