பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி கனடா – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மதிப்பீடு

IMF வெளியிட்ட இந்த மதிப்பீடு, கனடிய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி சாத்தியங்கள் குறித்கு வெளிப்படையான பார்வையை வழங்குகிறது.


பாரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கி கனடா – சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட மதிப்பீடு

கனடாவின் பொருளாதாரம், அமெரிக்காவின் சுங்க வரி பாதிப்புகளுக்கு இடையேயும் எதிர்பார்த்ததை விட நன்றாக செயல்பட்டு வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

IMF வெளியிட்ட இந்த மதிப்பீடு, கனடிய பொருளாதாரத்தின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால வளர்ச்சி சாத்தியங்கள் குறித்கு வெளிப்படையான பார்வையை வழங்குகிறது.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கிடையேயான USMCA (United States-Mexico-Canada Agreement) வர்த்தக உடன்படிக்கையில் உள்ள சில விலக்குகள், அமெரிக்க சுங்க வரிகளின் எதிர்மறையான தாக்கத்தைக் குறைக்க உதவியுள்ளதாக IMF அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

எனினும், கனடாவின் பொருளாதார வளர்ச்சி முழுமையாக பாதுகாப்பான நிலையில் இல்லை என்பதையும் IMF வலியுறுத்துகிறது. பின்வரும் காரணிகள் வளர்ச்சியை தாமதப்படுத்தும் அபாயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன:

  • பொருட்களின் விலை சரிவு
  • வெளிநாட்டு தேவை குறைவு
  • குடியேற்றம் வீதம் குறைதல்
  • சுங்க வரி தொடர்பான நிச்சயமற்ற நிலை

மேலும், வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுப் போக்கு சமீபகாலமாக தளர்ந்து வருவதாகவும் அறிக்கை குறிப்பிடுகிறது.

IMF, "வரும் மாதங்களில் பொருளாதார அபாயங்கள் சமநிலைப்படுத்தப்பட்டாலும், அதிகப்படியான நிச்சயமற்ற சூழல் நீடிக்கக்கூடும்" என எச்சரித்துள்ளது.

இதே நேரத்தில், கனடா அரசு பொது முதலீட்டை ஊக்குவிக்கும் நோக்கில் எடுத்துள்ள நடவடிக்கைகளை IMF பாராட்டியுள்ளது. குறிப்பாக, பொதுமக்கள் முதலீட்டை அதிகரிக்ஓகும் அரசின் முடிவு, பொருளாதார வளர்ச்சிக்கு சரியான மூலோபாயம் என IMF தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க