உயிரே போனாலும் முதல் காதலை மறக்காமல் நெஞ்சில் வைத்திருக்கும் 4 ராசிகள் - நீங்களும் இதில் இருக்கிறீர்களா?

Published on: 07 May 2026, 06:36 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

முதல் காதலை வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத 4 ராசிகள் யார்? விருச்சிகம், கடகம், மீனம், ரிஷப ராசிக்காரர்கள் ஏன் காதல் தோல்வியிலிருந்து வெளிவர முடியாமல் தவிக்கிறார்கள்?

உயிரே போனாலும் முதல் காதலை மறக்காமல் நெஞ்சில் வைத்திருக்கும் 4 ராசிகள் - நீங்களும் இதில் இருக்கிறீர்களா?

வாழ்க்கையில் மிகவும் இனிமையான காலகட்டம் என்பது பெரும்பாலும் முதல் காதலின் போதுதான். அந்த அப்பாவித்தனமான, பரிசுத்தமான உணர்வுகள் மனதில் ஆழமாகப் பதிந்துவிடும். சிலர் அதே காதலில் வெற்றி கண்டாலும், பலருக்கு முதல் காதல் கைகூடாமல் தோல்வியில்தான் முடிகிறது. அந்த வலியைச் சுமப்பவர்களில் சிலர் காலப்போக்கில் மறந்தாலும், சிலரால் வாழ்நாள் முழுவதும் அந்த நினைவுகளை மறக்கவே முடியாது. ஜோதிட நம்பிக்கைகளின்படி, நான்கு ராசிகளைச் சேர்ந்தவர்கள் உயிர் போனாலும் தங்கள் முதல் காதலை மறக்க மாட்டார்களாம். அவர்கள் யார் என்பதைப் பார்ப்போம்.

விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் இயற்கையிலேயே மிகுந்த உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்கள் காதலிலோ அல்லது பகையிலோ எதை மனதில் வைத்துக் கொண்டாலும் அதை நீண்டகாலம் சுமப்பார்கள். முதல் காதலில் அவர்களுக்கு முக்கியமானது நம்பிக்கை. அந்த நம்பிக்கை ஒருமுறை உடைந்தால், புதிய உறவில் மீண்டும் நம்பிக்கை வைப்பது அவர்களால் இயலாது. எனவே முதல் காதலின் நினைவுகள் அவர்களை நீண்ட காலம் வாட்டும்.

கடக ராசிக்காரர்கள் மற்ற ராசிகளைவிட அதிக உணர்ச்சித் தன்மை கொண்டவர்கள். அவர்கள் தங்கள் காதல் கூட்டியுடன் மிக ஆழமான பிணைப்பை உருவாக்கிக் கொள்கிறார்கள். அந்த உறவு முடிவுக்கு வந்த பின்னரும், காதலித்த நேரத்தின் நினைவுகளை மறப்பது என்பது அவர்களால் இயலாத ஒன்று. புதிய நபர்களிடம் மனம் திறப்பதில் சிரமம் உணர்வதால், முதல் காதலிலேயே அவர்கள் மனதளவில் தேங்கி நிற்கிறார்கள்.

மீன ராசியில் பிறந்தவர்கள் கற்பனைத் திறன் மிக்கவர்கள். அவர்கள் தங்கள் கனவுலகில் வாழ்வதையே விரும்புவார்கள். முதல் முறையாக காதலில் விழும்போது, அவர்கள் அந்த நபருடனே தங்கள் எதிர்காலத்தைக் கற்பனை செய்து பார்ப்பார்கள். அந்தக் காதல் தோல்வியில் முடியும் போது, அந்த நினைவுகள் அவர்கள் மனதில் நிரந்தரமாகப் பதிந்துவிடும். முதல் காதலின் ஏக்கம் அவர்களை என்றும் விட்டுப் பிரிவதில்லை.

ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதமும் விடாமுயற்சியும் கொண்டவர்கள். அவர்கள் ஒரு முறை காதலித்துவிட்டால், அந்த உறவைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்வார்கள். குறிப்பாக அது முதல் காதலாக இருக்கும்போது அவர்களின் அர்ப்பணிப்பு இன்னும் அதிகமாக இருக்கும். உறவு முடிவுக்கு வந்தாலும், அந்தக் காதலைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஒரு பொக்கிஷமாகப் பாதுகாப்பார்கள். முதல் காதலை மறப்பது என்பது அவர்களால் இயலாத காரியம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW