அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடி வேண்டுமா? எளிய வழிமுறைகள் இதோ!
முடி உதிர்தலைக் குறைத்து அடர்த்தியான மற்றும் நீளமான தலைமுடியைப் பெறுவதற்கு விளக்கெண்ணெயை தேங்காய் எண்ணெய் மற்றும் கற்றாழையுடன் இணைத்துப் பயன்படுத்தும் எளிய பாரம்பரிய வழிமுறைகளை அறிந்து கொள்ளுங்கள்.
மாசுபாடு மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் காரணமாகப் பலருக்கும் முடி உதிர்தல் மற்றும் முடி வளர்ச்சி குறைதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வாக, பாரம்பரிய தலைமுடிப் பராமரிப்பில் விளக்கெண்ணெய் பெரிதும் உதவுவதாகக் கூறப்படுகிறது. விளக்கெண்ணெய் உச்சந்தலையை ஈரப்பதமாக வைத்திருக்கவும், முடி உடைவதைக் குறைக்கவும் உதவுவதால் இதனை முறையாகப் பயன்படுத்துவது அவசியமாகும்.
முடி வளர்ச்சியை அதிகரிப்பதற்கு இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இக்கலவையைத் தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி ஐந்து நிமிடங்கள் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். சுமார் 45 நிமிடங்களின் பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசுவதன் மூலம் சிறந்த பலனைப் பெற முடியும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து பயன்படுத்தி வருவதால் தலைமுடி நன்கு நீளமாக வளரும் எனக் குறிப்பிடப்படுகிறது.
இதேபோன்று, இரண்டு தேக்கரண்டி விளக்கெண்ணெயுடன் ஒரு தேக்கரண்டி கற்றாழை ஜெல்லைச் சேர்த்து நன்கு கலந்து பயன்படுத்தும் முறையும் பலனளிக்கக்கூடியது. இந்தக் கலவையைத் தலையில் தடவி 30 நிமிடங்கள் ஊறவைத்த பின்னர் மென்மையான ஷாம்பு பயன்படுத்தித் தலைமுடியை அலசிக்கொள்ளலாம். இதனை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பின்பற்றி வருவதன் மூலம் ஆரோக்கியமான மற்றும் அடர்த்தியான தலைமுடியைப் பெற முடியும்.