முன்னோர்கள் கண்டிராத அதிசயம்! 100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ராஜயோகங்கள், வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களைத் தரக்கூடியவை.


முன்னோர்கள் கண்டிராத அதிசயம்! 100 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாகும் புதாதித்ய ராஜயோகம் – அதிர்ஷ்ட மழையில் நனையப் போகும் ராசிகள்

ஜோதிட சாஸ்திரத்தில் கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. குறிப்பாக கிரகங்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து உருவாக்கும் ராஜயோகங்கள், வாழ்க்கையில் முக்கியமான திருப்பங்களைத் தரக்கூடியவை. அதிலும் பண்டிகை தினங்களில் உருவாகும் ராஜயோகங்கள் மிகுந்த விசேஷத்தைக் கொண்டதாக கருதப்படுகின்றன. அந்த வகையில், 100 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அரிய கிரகச் சேர்க்கை நிகழவுள்ளது என்பதால் ஜோதிட உலகில் பெரும் கவனம் பெற்றுள்ளது.

ஜனவரி 14-ஆம் தேதி மகர சங்கராந்தி தினத்தில், மதியம் 2:50 மணிக்கு சூரிய பகவான் மகர ராசிக்குள் பெயர்ச்சி அடைகிறார். இதனைத் தொடர்ந்து, ஜனவரி 17-ஆம் தேதி புதன் பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குள் பிரவேசிக்கிறார். இந்த இரண்டு கிரகங்களும் மகர ராசியில் இணையும் போது, சக்திவாய்ந்த புதாதித்ய ராஜயோகம் உருவாகிறது. மகர சங்கராந்தி போன்ற புனித நாளில், சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராஜயோகம் உருவாவதால், இது மிகுந்த சிறப்பாகக் கருதப்படுகிறது. இந்த யோகத்தின் பலனால் சில ராசிக்காரர்கள் திடீர் அதிர்ஷ்டம், நிதி முன்னேற்றம் மற்றும் வாழ்க்கை தரத்தில் உயர்வை அனுபவிக்கக்கூடும்.

இந்த புதாதித்ய ராஜயோகம் கும்ப ராசிக்காரர்களின் லாப ஸ்தானத்தில் உருவாகுவதால், அவர்களுக்கு திடீர் பணவரவு மற்றும் பொருளாதார முன்னேற்றம் காணப்படும். புதிய வருமான வாய்ப்புகள் திறக்கப்படும். ஏற்கனவே செய்த முதலீடுகள் நல்ல பலன் தரத் தொடங்கும். அதிகரிக்கும் வருமானம் காரணமாக தங்கம், வெள்ளி போன்ற பாதுகாப்பான முதலீடுகளுக்கு கவனம் செலுத்துவீர்கள். சிலருக்கு நிலம் அல்லது மனை வாங்கும் வாய்ப்பும் அமையலாம். குடும்ப உறவுகளில் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி திரும்பும். வெளிநாடு தொடர்பான திட்டங்கள் மூலம் நிதி ஆதாயம் கிடைக்கும். தொழிலில் எதிர்பாராத லாபம் உண்டாகி, எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த ராஜயோகம் அதிர்ஷ்ட ஸ்தானத்தில் உருவாகுவதால், அதிர்ஷ்டம் முழுமையாக ஆதரவாக இருக்கும். வேலை காரணமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உருவாகலாம். அலுவலகத்தின் மூலம் வெளிநாட்டு பணிகள் அல்லது பதவி உயர்வுகள் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்தும் மதிப்பும் உயரும். குடும்ப வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்ந்து, உறவுகள் இனிமையடையும். கடன் சுமை குறையும். பணவரவு அதிகரிப்பதால், வாடகை வீட்டில் இருப்பவர்களுக்கு சொந்த வீடு அல்லது ஒத்தி வீட்டிற்கு மாறும் யோகம் உண்டாகும்.

கன்னி ராசிக்காரர்களுக்கு, புதாதித்ய ராஜயோகம் தன ஸ்தானத்தில் உருவாகுவதால், செல்வச் சேர்க்கையும் வசதிகளும் அதிகரிக்கும். இந்த காலகட்டத்தில் பொன், பொருள், இன்பங்களை அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வீட்டில் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். தங்க ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும். முதலீடுகள் மூலம் நல்ல லாபம் கிடைக்கும். புதிய வீடு வாங்கும் யோகமும் அமையலாம். தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். தாய் மற்றும் தந்தை வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். குறிப்பாக தாயார் வழியில் இருந்து பூர்வீக சொத்துகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகலாம்.

இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிடக் கருத்துக்கள், மத நூல்கள் மற்றும் பஞ்சாங்கத்தை அடிப்படையாகக் கொண்டவை. இவை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு எந்தவித உத்தரவாதமும் வழங்கப்படவில்லை.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க