பிக்பாஸ் வீட்டில் பார்வதியைப் புகழ்ந்த திவாகர் – உடனே அசிங்கப்படுத்திய பிக்பாஸ்!

நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இறுதி போட்டியாளர்களுடன் உரையாடும் பகுதி ஒளிபரப்பாகியுள்ளது.


பிக்பாஸ் வீட்டில் பார்வதியைப் புகழ்ந்த திவாகர் – உடனே அசிங்கப்படுத்திய பிக்பாஸ்!

பிக்பாஸ் 9-ன் மிகவும் சர்ச்சைக்குரிய போட்டியாளரான விஜே பார்வதி, கம்ருதீனுடன் இணைந்து சாண்ட்ராவை டிக்கெட் டூ ஃபினாளே டாஸ்கில் காரிலிருந்து தள்ளியதற்காக விஜய் சேதுபதி மூலம் ரெட் கார்டு பெற்று வெளியேற்றப்பட்டார்.

இது பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண் போட்டியாளர் ரெட் கார்டு பெறுவதாக அமைந்தது. அவர்கள் இருவருக்கும் 90 நாட்களுக்கான சம்பளம், வழியனுப்புதல் வீடியோ, டாஸ்க் வெற்றி பரிசுகள் உள்ளிட்ட அனைத்தும் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நோக்கி நகரும் வேளையில், முன்னாள் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்து இறுதி போட்டியாளர்களுடன் உரையாடும் பகுதி ஒளிபரப்பாகியுள்ளது. அந்த வரிசையில் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகரும் பிரவீன் காந்தியும் உள்ளே நுழைந்தனர். 

உள்ளே வந்த திவாகர், விஜே பார்வதியைப் பற்றி நேர்மறையாகப் பேச முயன்ற உடனேயே பிக்பாஸ் குரல் வாய்ப்பட்டு, “திவாகர்! வெளியுலக விஷயங்களைப் பேசாதீர்கள். இதை மீறினால், மெயின் டோர் வழியாக வெளியே செல்லலாம்” என கண்டிப்பாகத் தடுத்தது. இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் பேச்சுப் பொருவாக மாறியுள்ளது.

முன்னதாகவே, திவாகர் விஜே பார்வதிக்கு ஆதரவாகவே நின்று வந்துள்ளார். ஒரே ஊர் என்பதாலும், அவரைத் “தங்கை” என்று அழைத்து பாசம் காட்டியதுடன், செய்தியாளர்களிடம் பேசும்போது “விஜே பார்வதியை முதுகில் குத்திவிட்டார்கள்” என்று கூறியிருந்தார். எனினும், பிக்பாஸ் வீட்டுள் அதை கூட பேச அனுமதிக்கப்படாத நிலை, நிகழ்ச்சியின் கண்டிப்பான விதிமுறைகளை மீண்டும் நினைவூட்டியுள்ளது.

இப்போது வீட்டில் இருக்கும் அரோரா, சபரி, கானா வினோத், விக்ரம், திவ்யா மற்றும் சாண்ட்ரா ஆகியோருக்கு இறுதி வெற்றிப் பட்டம் எதிர்பார்ப்பில் உள்ளது. அதே நேரம், வெளியேற்றப்பட்டவர்கள் தங்கள் அனுபவங்களை சமூக ஊடகங்கள் மூலம் பகிர்ந்து வருகின்றனர். விஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் தனக்கு ஆதரவாக வந்துள்ள பதிவுகளை பகிர்ந்து வருகிறார். ஆனால், அதற்கு எதிர்மறை கருத்துகளும் பெருகி வருவது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க