சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் முக்கிய சாதனையை தகர்த்த பாபர் அசாம் – விவரம் இதோ

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது.


சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் முக்கிய சாதனையை தகர்த்த பாபர் அசாம் – விவரம் இதோ

ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியானது நேற்று பிப்ரவரி 1-ஆம் தேதி லாகூர் நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்து அசத்தியது.

விராட் கோலியின் சாதனையை தகர்த்த பாபர் அசாம் 

பாகிஸ்தான் அணி சார்பாக அதிகபட்சமாக சயீம் அயூப் 56 ரன்களையும், பாபர் அசாம் 50 ரன்களையும் குவித்து அசத்தினர். பின்னர் 208 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது பாகிஸ்தான் அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 16.5 ஓவ0ர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ரன்களை மட்டுமே குவித்தது.

இதன் காரணமாக பாகிஸ்தான் அணியானது 111 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டியில் அரைசதம் அடித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் பாபர் அசாம் சர்வதேச டி20 போட்டிகளில் விராட் கோலியின் மாபெரும் சாதனை ஒன்றை தகர்த்துள்ளார். அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரை சதங்களை அடித்த வீரராக முன்னாள் இந்திய வீரரான விராட் கோலி 38 அரை சதங்களுடன் முதலிடத்தில் இருந்த வேளையில் நேற்றைய போட்டியில் பாபர் அசாம் அடித்த அரை சதம் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அவரது 39-ஆவது அரை சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை பட்டியலில் தற்போது பாபர் அசாம் முதல் இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அவருக்கு அடுத்து விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க