ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை : நடந்தது என்ன?

Published on: 13 Sep 2025, 08:08 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா, மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை : நடந்தது என்ன?

பிரபல பாலிவுட் நடிகை கரிஷ்மா சர்மா, மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்ததில் தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம், கரிஷ்மா சர்மா மும்பையில் உள்ள சர்ச்சுகேட் பகுதிக்கு படப்பிடிப்புக்காக புடவை அணிந்து புறநகர் ரயிலில் பயணம் செய்துள்ளார். ரயில் புறப்பட்ட பிறகு, தனது தோழிகளால் ரயிலில் ஏற முடியவில்லை என்பதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அவர், ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்துள்ளார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் அவரது முதுகு மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட கரிஷ்மா சர்மாவுக்கு, எம்.ஆர்.ஐ. ஸ்கேன் எடுக்கப்பட்டு, ஒரு நாள் முழுவதும் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள கரிஷ்மா சர்மா, “எனது தலை வீங்கியுள்ளது. முதுகு மற்றும் உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டு வலியால் அவதிப்பட்டு வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW