பிரான்ஸில் பெண் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

Published on: 23 Nov 2025, 07:00 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

பிரான்ஸில் பெண் ஒருவரை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் பெண் துஷ்பிரயோகம்; இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞன்

பிரான்ஸில் பெண் ஒருவரை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்பட்டு வரும் குற்றவாளி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரான்ஸில் பெண் ஒருவரை தவறான முறையில் துஷ்பிரயோகம் செய்து வந்ததாக  தாக்கல் செய்யப்பட்ட ஒரு குற்ற வழக்கில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் இலங்கைத் தமிழர், இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

30 வயதுடைய இந்த நபர், பிரான்ஸ் அதிகாரிகளால் தேடப்பட்டுவரும் நிலையில, லிவர்பூல் நகரில் தேசிய குற்றவியல் அமைப்பின் (National Crime Agency – NCA) நாடுகடத்தல் பிரிவினரால் சில நாட்களுக்கு முன்பு பிடிக்கப்பட்டுள்ளார்.

பிடிபட்ட இவர், அதன் பின்னர் லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிமன்றம், அவரை தற்காலிக விசாரணை காவலில் வைக்க உத்தரவிட்டதுடன், நாடுகடத்தல் தொடர்பான விசாரணையை 2026 மார்ச் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

பிரான்ஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டிருக்கும் நாடுகடத்தல் கோரிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தீர்மானிக்கப்படவுள்ளன.