2026 முதல் மலேசியாவில் 16 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை

மலேசியா, 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது.

Published on: 24 Nov 2025, 05:25 pm
2

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source
2026 முதல் மலேசியாவில் 16 வயதிற்குக் குறைவான குழந்தைகளுக்கு சமூக ஊடக தடை

மலேசியா, 16 வயதிற்குக் குறைவான குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்துவதைத் தடை செய்வதாக அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறை 2026 முதல் அமலுக்கு வரும் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக மலேசிய தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்ஸில் தெரிவித்ததாவது, ஆன்லைனில் ஏற்படும் நிதி மோசடிகள், பாலியல் துஷ்பிரயோகத் தாக்கங்கள், மற்றும் குழந்தைகளை குறிவைக்கும் பிற அபாயங்களிலிருந்து இளம் பயனர்களை பாதுகாப்பது இந்த தடையின் முக்கிய நோக்கமாகும்.

இந்த விதி, 2025 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் பாதுகாப்புச் சட்டத்தில் சேர்க்கப்பட உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்கள் குழந்தைகளின் மன நலத்துக்கும் பாதுகாப்பிற்கும் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த உலகளாவிய கவலைக்கிடமான சூழ்நிலை காரணமாக, பல நாடுகள் இப்போது வயது வரம்புகளை கடுமையாக அமல்படுத்தி வருகின்றன. சமீபத்தில் ஆஸ்திரேலியாவும் இதே போன்ற கட்டுப்பாட்டை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW