சீரற்ற காலநிலையிலும் இலங்கைக்கு அதிகரித்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள்
ஞாயிற்றுக்கிழமை (07) நிலவரப்படி மொத்தமாக 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 8,989 பேர்.
இலங்கையில் சீரற்ற காலநிலை இருந்தபோதிலும், இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே நாட்டுக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 43,000–ஐ கடந்துள்ளது என்று சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (07) நிலவரப்படி மொத்தமாக 43,329 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்களில் இந்தியர்கள் 8,989 பேர்.
மேலும் ரஷ்யா, ஜேர்மனி, ஐக்கிய இராச்சியம், சீனா மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் முக்கியமான அளவில் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.