குடும்பத் தகராறில் இளைஞர் கொலை – கிரிக்கெட் மட்டை தாக்குதலில் 6 பேர் கைது

ரத்மலானை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


குடும்பத் தகராறில் இளைஞர் கொலை – கிரிக்கெட் மட்டை தாக்குதலில் 6 பேர் கைது

ரத்மலானை பகுதியில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக 21 வயது இளைஞர் ஒருவர் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்மலானை தர்மாராம வீதியில், ரயில் பாதைக்கு அருகில் வசிக்கும் இரண்டு குடும்பங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வன்முறையாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த மோதலின் போது குறித்த இளைஞர் கிரிக்கெட் மட்டை மற்றும் விக்கெட் தடிகளால் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கடுமையாக காயமடைந்த அவர் பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக நான்கு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்ட மொத்தம் அறுவர் இன்று (07) கல்கிஸ்ஸ பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர் ரத்மலானை ஸ்ரீ தர்மாராம வீதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க