"எல்லை மீறாத கவர்ச்சி நல்லதுதான்" - திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சி காட்டுவது குறித்து ரகுல் பிரீத் சிங் பேட்டி

Published on: 25 Jun 2026, 07:22 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

திருமணத்திற்குப் பிறகும் கவர்ச்சியான ஆடைகளில் கவனம் ஈர்த்து வரும் நடிகை ரகுல் பிரீத் சிங், இது குறித்து வரும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். "கவர்ச்சி நடிப்பின் ஒரு அங்கம்; எல்லை மீறாத வரை அது நல்லதுதான்" எனவும், திருமணம் நடிகையின் வாழ்க்கைக்கு தடையாக இருக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.

 "எல்லை மீறாத கவர்ச்சி நல்லதுதான்" - திருமணத்துக்குப் பிறகும் கவர்ச்சி காட்டுவது குறித்து ரகுல் பிரீத் சிங் பேட்டி

தென்னிந்திய சினிமாவின் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவரான ரகுல் பிரீத் சிங், இந்தி நடிகர் ஜாக்கி பக்னானியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பின்னரும் தனது திரைப்பயணத்தை தொடர்ந்து வரும் இவர், தனது நடிப்பு மற்றும் தோற்றத்தில் வரும் மாற்றங்கள் மூலம் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறார்.

குறிப்பாக சமீபத்திய பட விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் ரகுல் பிரீத் சிங் அணியும் அதீத கவர்ச்சியான உடைகளும், அவரது தோற்றமும் பெரும் வரவேற்பையும் சில எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. 'திருமணமான பிறகும் இவ்வளவு கவர்ச்சி காட்டுவது அவசியமா?' என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்த கவர்ச்சி தொடர்பான கேள்விகளுக்கு ரகுல் பிரீத் சிங் சமீபத்தில் அளித்த பேட்டி பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

அவர் அந்தப் பேட்டியில் கூறுகையில், "நடிப்பின் ஒரு முக்கிய அங்கமாக கவர்ச்சியும் இருக்கிறது. எல்லை மீறாத அளவிலான கவர்ச்சி நல்லதுதான். ஆனால், இங்கே பலர் கவர்ச்சி என்பதையே ஒரு எதிர்மறையான கோணத்தில் பார்க்கிறார்கள். அந்த பார்வை மாறினால் பாதி பிரச்சினைகள் தானாகவே தீர்ந்துவிடும். திருமணம் என்பது ஒரு நடிகையின் வாழ்க்கைக்கு தடையாகவோ, முடிவாகவோ ஆகிவிடக்கூடாது. உண்மையான திறமையை எந்த சூழ்நிலையாலும் கட்டுப்படுத்த முடியாது. வாழ்க்கைத் துணைக்கும், தொழிலுக்கும் இடையே நல்ல புரிதல் இருந்தால் எல்லாமே சாத்தியம்" என்று தெளிவாகத் தெரிவித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகும் ரகுல் பிரீத் சிங் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் இந்தப் பேச்சு இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இதற்கு ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்துக்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW