18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ராகு–சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு!

தற்போதைய காலகட்டத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே நேரத்தில், நிழல் கிரகமாக அறியப்படும் ராகுவும் அதே கும்ப ராசியில் பயணித்து வருகிறது.


18 ஆண்டுகளுக்குப் பிறகு உருவான ராகு–சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணவரவு!

வேத ஜோதிடத்தின் படி, அனைத்து கிரகங்களுக்கும் தலைவனாக சூரியன் கருதப்படுகிறார். சூரியன் மாதம் ஒருமுறை தனது ராசியை மாற்றுவதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்துவார். தற்போதைய காலகட்டத்தில் சூரியன் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதே நேரத்தில், நிழல் கிரகமாக அறியப்படும் ராகுவும் அதே கும்ப ராசியில் பயணித்து வருகிறது.

ராகு மற்ற கிரகங்களைப் போல நேர்கதியில் நகராமல், எப்போதும் வக்ர நிலையில் பயணிப்பது அதன் சிறப்பு. மேலும், ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை ராகு தங்கும். இந்த நிலையில், கும்ப ராசியில் சூரியன் மற்றும் ராகு இணையும் சேர்க்கை 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உருவாகியுள்ளது. பொதுவாக இந்த சேர்க்கை மிகவும் சாதகமானதாகக் கருதப்படாதாலும், சில ராசிக்காரர்களுக்கு இது எதிர்பாராத அதிர்ஷ்டத்தையும், நிதி முன்னேற்றத்தையும் அளிக்கவுள்ளது.

இந்த ராகு–சூரிய சேர்க்கை மார்ச் மாதம் வரை நீடிப்பதால், அடுத்த ஒரு மாத காலம் குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் மற்றும் வாழ்க்கை மாற்றங்களை ஏற்படுத்தும் காலமாக இருக்கும்.

மேஷ ராசி

மேஷ ராசிக்காரர்களுக்கு, இந்த சேர்க்கை 11-வது வீட்டில் நிகழ்வதால் நிதி நிலைமை வலுவடையும். தேவையற்ற செலவுகள் குறையும்; பழைய முதலீடுகளிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு முன்னேற்ற வாய்ப்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு லாபம் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணியிடத்தில் இருந்த குழப்பங்கள் தீர்ந்து, ஆரோக்கியத்திலும் நல்ல மாற்றம் ஏற்படும்.

கடக ராசி

கடக ராசிக்காரர்களுக்கு, 9-வது வீட்டில் இந்த கிரக சேர்க்கை அமைந்துள்ளதால் அதிர்ஷ்டம் துணை நிற்கும். பண வரவு மேம்படும்; செலவுகள் கட்டுக்குள் வரும். கடன் சுமை குறையும். புதிய தொழில் தொடங்க விரும்புவோருக்கு இது சிறந்த காலமாக இருக்கும். முதலீடுகள் நல்ல லாபத்தைத் தரும். உடல் சோர்வும் மன கவலையும் குறைந்து, நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி கிடைக்கும்.

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு, 3-வது வீட்டில் ராகு–சூரிய சேர்க்கை அமைவதால் வருமான ஆதாரங்கள் பெருகும். பணத்தை சேமிக்கும் திறன் அதிகரிக்கும். பழைய முதலீடுகளிலிருந்து எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும் கௌரவமும் உயரும். புதிய நட்புகள் உருவாகும்; அந்த நட்புகள் நிதி ரீதியாகவும் உதவியாக அமையும். உடன் பிறந்தவர்களின் ஆதரவும் இந்த காலத்தில் கிடைக்கும்.

கும்ப ராசி

கும்ப ராசிக்காரர்களுக்கு, முதல் வீட்டிலேயே இந்த சேர்க்கை அமைந்துள்ளதால் திடீர் பணவரவு ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் லாபம் கிடைக்கும். வணிகர்களுக்கு புதிய, லாபகரமான ஒப்பந்தங்கள் கைகூடும். நீண்ட நாட்களாக இருந்த பணப் பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, உடல் நலம் மேம்படும். திருமணம் ஆகாதவர்களுக்கு நல்ல வரன் தேடி வரக்கூடிய வாய்ப்பும் உள்ளது.

மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் பாரம்பரிய ஜோதிட நம்பிக்கைகள் மற்றும் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஒவ்வொருவரின் ஜாதக அமைப்பைப் பொறுத்து பலன்கள் மாறுபடலாம். 

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க