மீனத்தில் வக்ரமாகும் சனி: அடுத்த 138 நாட்கள் அதிர்ஷ்டம் இந்த 5 ராசிகளுக்கு தான்!

ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி என்பதால், அவர் செய்யும் பெயர்ச்சிகள் மற்றும் வக்ர இயக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.


மீனத்தில் வக்ரமாகும் சனி: அடுத்த 138 நாட்கள் அதிர்ஷ்டம் இந்த 5 ராசிகளுக்கு  தான்!

ஜோதிடத்தில் சனிபகவான் மிகவும் முக்கியமான கிரகமாகக் கருதப்படுகிறார். ஒன்பது கிரகங்களில் மிகவும் மெதுவாக நகரும் கிரகம் சனி என்பதால், அவர் செய்யும் பெயர்ச்சிகள் மற்றும் வக்ர இயக்கங்கள் மனிதர்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

தற்போது சனிபகவான் மீன ராசியில் சஞ்சாரம் செய்து வருகிறார். 2026 ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதிக்கு பிறகு அவர் வக்ர நிலையில் செல்ல உள்ளார். இந்த வக்ர பெயர்ச்சியின் காரணமாக அடுத்த 138 நாட்களுக்கு சில ராசியினரின் வாழ்க்கையில் அதிர்ஷ்டம் பல மடங்கு அதிகரிக்கப் போகிறது. அந்த ராசியினருக்கு வாழ்க்கையில் ஏற்படப்போகும் மாற்றங்கள் குறித்து இங்கே பார்ப்போம்.

ரிஷப ராசியினருக்கு இந்த சனி வக்ர பெயர்ச்சி, அவர்களை யாரும் எட்ட முடியாத உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் சக்தியைக் கொண்டதாக இருக்கும். பணியில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சம்பள உயர்வு போன்ற நல்ல மாற்றங்கள் நிகழும். சட்டம் மற்றும் வழக்கு தொடர்பான விஷயங்களில் தைரியமாக செயல்பட்டு, தங்களுக்கு உரிய நியாயத்தைப் பெறக்கூடிய சிறப்பான காலகட்டமாக இது அமையும்.

கன்னி ராசியினரின் வாழ்க்கையில் இந்த வக்ர பெயர்ச்சி வருமான வளர்ச்சியை ஏற்படுத்தும். வருமானம் இரட்டிப்பாகும் வாய்ப்புகள் உருவாகும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைப்பதுடன், எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கி நகரும். இதுவரை மன அழுத்தத்தை ஏற்படுத்திய நபர்கள் தானாகவே விலகிச் செல்லும் சூழ்நிலையும் உருவாகும்.

துலாம் ராசியினருக்கு இந்த காலகட்டம் மிகுந்த எழுச்சியையும் அதிகார உணர்வையும் தரக்கூடியதாக இருக்கும். வரும் மாதங்களில் தங்களுக்கென ஒரு ராஜசமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். அதிக வருமானம் ஈட்டுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சரியான திட்டமிடலுடன் செயல்பட்டால் பெரிய முன்னேற்றத்தை அடைய முடியும். எதிராக செயல்பட்டவர்கள் தங்களின் நிலைப்பாட்டை மாற்றி, சரணடையும் சூழ்நிலையும் உருவாகும்.

மகர ராசியினருக்கு சனி வக்ர பெயர்ச்சி மிகப்பெரிய நன்மைகளை வழங்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் மன மகிழ்ச்சியை அதிகரிக்கும். வியாபாரம் மற்றும் முதலீடு, குறிப்பாக பங்கு சந்தை தொடர்பான விஷயங்களில் நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் மற்றும் உயர்ந்த பதவிகள் இவர்களைத் தேடி வரக்கூடிய காலமாக இது அமையும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க