மகன் - மகள் முத்தமழையில் அஜித்குமார்! ஷாலினி பகிர்ந்த க்யூட் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமார் தனது மகன் ஆத்விக் மற்றும் மகள் அனௌஷ்காவுக்கு முத்தம் கொடுக்கும் இனிய குடும்பப் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


மகன் - மகள் முத்தமழையில் அஜித்குமார்! ஷாலினி பகிர்ந்த க்யூட் புகைப்படங்கள்

நடிகர் அஜித்குமார் தனது குழந்தைகளுக்கு அன்புடன் முத்தம் கொடுக்கும் இனிமையான குடும்பப் புகைப்படங்களை அவரது மனைவி ஷாலினி வெளியிட்டுள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி, ரசிகர்களின் நெஞ்சை நெகிழச் செய்துள்ளன.

தற்போது அஜித்குமார் தனது குடும்பத்தினருடன் பிரான்ஸில் விடுமுறைக்குச் சென்றுள்ளதாகத் தெரிகிறது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஷாலினி பகிர்ந்துள்ளார்.

அந்தப் படங்களில், அஜித்குமார் தனது மகன் ஆத்விக்கின் நெற்றியில் பாசத்துடன் முத்தமிடுவதும், மகள் அனௌஷ்காவுக்கு முத்தம் கொடுப்பதும், பதிலுக்கு அனௌஷ்கா தனது தந்தைக்கு முத்தம் கொடுப்பதுமான அழகான காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தற்போது அஜித்குமார் தனது கவனத்தை சினிமாவைத் தாண்டி ரேசிங் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் செலவிடுவதில் அதிகம் செலுத்தி வருகிறார். இதனால், அவரது அடுத்த படமான 'AK64' வெளியாகுமா என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது. எனினும், இந்த இனிய குடும்பப் புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து, அஜித்குமாரின் குடும்ப பாசத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க