பூஜா ஹெக்டேவை ஆச்சரியப்படுத்திய சிறுவன் நடனம் சமூக வலைதளங்களில் வைரல்!

Published on: 09 Feb 2026, 12:18 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

நடிகை பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடனமாடிய சிறுவன் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பூஜா ஹெக்டேவை ஆச்சரியப்படுத்திய சிறுவன் நடனம் சமூக வலைதளங்களில் வைரல்!

நடிகை பூஜா ஹெக்டேவுடன் இணைந்து நடனமாடிய சிறுவன் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

‘கூலி’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘மோனிகா’ பாடலுக்கு பூஜா ஹெக்டே நடனமாடி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தார். அனிருத் இசையமைத்த அந்தப் பாடல் பல மில்லியன் பார்வைகளை பெற்று, கடந்த ஆண்டு அதிகம் கேட்கப்பட்ட பாடல்களில் ஒன்றாகத் திகழ்ந்தது.

இந்நிலையில், சென்னை நகரில் நடைபெற்ற ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே, ரசிகர்களின் கோரிக்கையின்படி ‘மோனிகா’ பாடலுக்கு நடனமாடினார். அப்போது எதிர்பாராத விதமாக மேடையில் இருந்த ஒரு சிறுவன் மிக வேகமான மற்றும் திறமையான அசைவுகளுடன் நடனம் ஆடி அனைவரையும் கவர்ந்தார்.

அச்சிறுவனின் அசத்தலான நடனத்தை பார்த்த பூஜா ஹெக்டே கூட ஒரு கணம் ஆடுவதை நிறுத்தி அவரது திறமையை ரசித்தார். இந்த நிகழ்வின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரும் அந்த சிறுவனின் திறமையை பாராட்டி வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW