உங்கள் மூக்கு என்ன வடிவம்? சாமுத்ரிகா சாஸ்திரம் சொல்லுவது என்ன தெரியுமா?

Published on: 08 Jan 2026, 08:24 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

ஒருவரின் முகம், கண்கள், காதுகள், விரல்கள் மற்றும் முக்கியமாக மூக்கின் வடிவம் ஆகியவை அவரது ஆளுமை, பலங்கள், பலவீனங்கள் மற்றும் ஆசைகள் பற்றிய ஆழமான புரிதலைத் தரும்.

உங்கள் மூக்கு என்ன வடிவம்?  சாமுத்ரிகா சாஸ்திரம் சொல்லுவது என்ன தெரியுமா?

சாமுத்ரிகா சாஸ்திரம் என்பது பண்டைய இந்திய உடல் அங்க வாசிப்பு முறையாகும். இதன்படி, ஒருவரின் முகம், கண்கள், காதுகள், விரல்கள் மற்றும் முக்கியமாக மூக்கின் வடிவம் ஆகியவை அவரது ஆளுமை, பலங்கள், பலவீனங்கள் மற்றும் ஆசைகள் பற்றிய ஆழமான புரிதலைத் தரும். உங்கள் மூக்கு எந்த வடிவில் இருக்கிறது என்பதைப் பார்த்து, நீங்கள் எவ்வாறு சிந்திக்கிறீர்கள், எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதை இந்தப் பாரம்பரிய அறிவு விளக்குகிறது.

1. பெரிய மூக்கு

பெரிய நாசித் துளைகளுடன் வட்டமான நுனியைக் கொண்ட இந்த மூக்கு உள்ளவர்கள் தீவிரமான எதார்த்தவாதிகள். அவர்கள் சுதந்திரத்தை மதிப்பவர்கள்; ஆனால், ஆணவமும் அதிகம். தங்கள் கருத்தை எப்போதும் சொல்ல விரும்புவார்கள். பிறரிடம் உதவி கேட்பதை அவர்கள் தவிர்க்கிறார்கள் – ஏனெனில், அது அவர்களின் சுயமரியாதைக்கு முரணானது. எல்லாவற்றிலும் கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பொறுப்பை விரும்புவார்கள்.

2. ரோமன் மூக்கு

மூக்கின் தண்டில் சற்று வளைவு இருந்தால், அது ரோமன் மூக்கு எனப்படும். இந்த மூக்கு உள்ளவர்கள் கம்பீரமான, பகுத்தறிவு மிக்க, சவால்களை முக்குக்கு நிற்கும் தன்மை கொண்டவர்கள். பெரிய கூட்டத்திலும் தனி அடையாளம் கொண்டவர்களாகத் திகழ்வார்கள். வாய்ப்புகளைத் தாங்களே உருவாக்கும் திறன் படைத்தவர்கள்; ஆனால், அவசர முடிவுகளைத் தவிர்க்கும் சுயக்கட்டுப்பாட்டுடன் செயல்படுவார்கள்.

3. குண்டான மூக்கு

அகலமான, சதைப்பற்றுள்ள இந்த மூக்கு உள்ளவர்கள் கவர்ச்சிகரமான ஆளுமை கொண்டவர்கள். அவர்கள் அதிபுத்திசாலிகள், எச்சரிக்கையானவர்கள், தாராளமானவர்கள் மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். விவேகம், அன்பு, கற்பனைத்திறன் ஆகியவற்றின் கலவையாக இவர்கள் விளங்குவார்கள். வேகமாகச் சிந்திக்கும் இவர்கள், உறுதியான மனப்பான்மையுடன் திட்டங்களை உருவாக்குவார்கள்.

4. பட்டன் மூக்கு

சிறிய, நேர்த்தியான வட்டமான நுனி கொண்ட இந்த மூக்கு உள்ளவர்கள் அன்பு நிரம்பிய, விசுவாசமான மற்றும் கற்பனைத்திறன் மிக்கவர்கள். எனினும், மனநிலை மாற்றங்களுக்கு ஆளாகி, எளிதில் உணர்ச்சிவசப்படுவார்கள். அவர்கள் தங்கள் அக்கறையால் சூழலை மகிழ்ச்சியாக வைத்திருப்பார்கள். திட்டமிடுவதில் சிறந்தவர்களாக இருந்தாலும், சில நேரங்களில் குழந்தைத்தனமான பிடிவாதம் காட்டுவது மற்றவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம்.

5. பருந்து மூக்கு

இது அரிதான வடிவம். இந்த மூக்கு உள்ளவர்கள் தன்னம்பிக்கையுடன் சுதந்திரமாக வாழ விரும்புபவர்கள். ஆதிக்கம் செலுத்தும் ஆளுமை கொண்டவர்கள்; சில நேரங்களில் ஆணவமாகவும் தோன்றலாம். மற்றவர்களின் மதிப்பையும், முக்கியத்துவத்தையும் மிகவும் விரும்புவார்கள். தங்கள் முடிவுகளில் யாரும் தலையிடக்கூடாது என உறுதியாக நிற்பார்கள்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW