கத்திமுனையில் அச்சுறுத்தி கிளிநொச்சியில் 26 வயது பெண் பாலியல் வன்கொடுமை: கைதான சந்தேகநபர்களில் 17 வயது சிறுவனும் அடக்கம்!

கிளிநொச்சி சாந்தபுரத்தில் 26 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கத்திமுனையில் அச்சுறுத்தி கிளிநொச்சியில் 26 வயது பெண் பாலியல் வன்கொடுமை: கைதான சந்தேகநபர்களில் 17 வயது சிறுவனும் அடக்கம்!

கிளிநொச்சி சாந்தபுரத்தில் 26 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி செய்திகள், சாந்தபுரம் சம்பவம், கிளிநொச்சி பொலிஸார், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு, சந்தேகநபர்கள் கைது, போதைப்பொருள் பாவனை, கிளிநொச்சி வைத்தியசாலை, இலங்கை குற்றச் செய்திகள், வடமாகாண செய்திகள், Kilinochchi News

கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாந்தபுரம் பகுதியில் 26 வயதுடைய பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 17 வயதுடைய சிறுவனும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களில் 17, 18 மற்றும் 20 வயதுடைய மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் 8ஆம் திகதி இரவு, கிளிநொச்சி சாந்தபுரம் கிராமத்தில் தனது பெற்றோருடன் வீட்டில் தங்கியிருந்த 26 வயதுடைய பெண் ஒருவர், கத்திமுனையில் அச்சுறுத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நான்கிற்கும் மேற்பட்டோர் இந்தச் சம்பவத்தில் தொடர்புபட்டிருக்கலாம் என பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது பெற்றோரும் பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலங்களில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் இன்று (10.11.2026) கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையில் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் மருத்துவப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

குறித்த மூவரும் கஞ்சா மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பயன்படுத்தியிருந்தமை மருத்துவப் பரிசோதனைகளில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 26 வயதுடைய பெண், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க