கேது நட்சத்திர பெயர்ச்சி 2026: ஜனவரி 25 முதல் இந்த 3 ராசிக்காரர்கள் அதிக கவனம் தேவை!
வேத ஜோதிடத்தில் நிழல் கிரகமாகக் கருதப்படும் கேது, மற்ற கிரகங்களைப் போல நேர்கதியில் பயணிக்காமல் எப்போதும் வக்ர நிலையில் பயணிப்பவர். கேதுவிற்கு தனியாக சொந்த ராசி இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஒரு ராசியில் சுமார் 18 மாதங்கள் வரை தங்கும் கேது, அந்த காலகட்டத்தில் நட்சத்திரங்களையும் மாற்றிக் கொண்டே பயணிப்பார்.
ஜோதிடத்தின் படி, கேது ஞானம், ஆன்மிகம், திடீர் மாற்றங்கள் மற்றும் பற்றின்மை போன்றவற்றின் காரகன். தற்போது கேது சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்த நிலையில், ஜனவரி 25ஆம் தேதி கேது பூரம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்திலிருந்து முதல் பாதத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த நட்சத்திரத்தில் அவர் மார்ச் 29ஆம் தேதி வரை இருப்பார்.
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் என்பதால், கேதுவின் இந்த நட்சத்திர பெயர்ச்சி சிலருக்கு ஆன்மிக நாட்டத்தை அதிகரிக்கும். அதே நேரத்தில் வாழ்க்கையில் பல சவால்களையும் உருவாக்கும். வேலை தொடர்பான பிரச்சனைகள், வியாபாரத்தில் நஷ்டம், உறவுகளில் கருத்து வேறுபாடுகள், பயணங்களில் தடைகள் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்த கேது நட்சத்திர பெயர்ச்சியின் போது குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம்.
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் சவால்கள் நிறைந்ததாக அமையலாம். வேலை தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்து மன உளைச்சலை ஏற்படுத்தலாம். திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடுகள் மற்றும் பதற்றம் உருவாகும் வாய்ப்பு உள்ளது. மாணவர்கள் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
துலாம் ராசிக்காரர்களுக்கு தனிப்பட்ட வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும் சமநிலையைப் பேணுவது கடினமாக இருக்கலாம். காதல் வாழ்க்கையில் புரிதல் குறைவால் பதற்றம் அதிகரிக்கும். எதிர்பாராத செலவுகள் மன அழுத்தத்தை உருவாக்கலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். தம்பதிகளிடையே சிறிய விஷயங்களுக்கே பெரிய பிரச்சனைகள் உருவாக வாய்ப்பு உள்ளது.
மீன ராசிக்காரர்களுக்கு இந்த கேது நட்சத்திர பெயர்ச்சி வாழ்க்கையில் பல தடைகளை உருவாக்கலாம். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் இன்னும் சில காலம் பொறுமையுடன் காத்திருக்க வேண்டியிருக்கும். பணியில் எதிர்பார்த்த பலன் கிடைக்க கூடுதல் முயற்சி தேவைப்படும். பண விஷயங்களில் மிகுந்த எச்சரிக்கை அவசியம். தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் உணவுப் பழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
மேலே வழங்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் ஜோதிட அனுமானங்கள் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் பலன்கள் நபருக்கு நபர் மாறுபடலாம். இந்த தகவல் முழுக்க தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் தகுந்த ஜோதிட நிபுணரை அணுகுவது சிறந்தது.
