பொங்கல் முடிந்ததும் குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

Published on: 17 Jan 2026, 07:32 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும், நல்ல தொடக்கங்களையும் உருவாக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

பொங்கல் முடிந்ததும் குரு பகவான் உருவாக்கும் கஜகேசரி ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்

பொங்கல் பண்டிகை முடிந்த கையோடு ஜோதிடரீதியாக ஒரு முக்கியமான ராஜயோகம் உருவாகி வருகிறது. சந்திரன் மற்றும் குரு பகவான் ஒரே ராசியில் அல்லது கேந்திர ஸ்தானங்களான 1, 4, 7, 10 ஆகிய வீடுகளில் இணையும் போது உருவாகும் இந்த யோகமே ‘கஜகேசரி ராஜயோகம்’. சந்திரன் மனித மனநிலை, உணர்ச்சிகள் மற்றும் சிந்தனைகளை குறிக்கும் கிரகமாகவும், குரு பகவான் அறிவு, ஞானம், செல்வம், நீதி மற்றும் மங்கள நிகழ்வுகளின் காரணியாகவும் கருதப்படுகிறார். இந்த இரு சக்திவாய்ந்த கிரகங்களின் சேர்க்கை ஜோதிடத்தில் அதிர்ஷ்டம், செழிப்பு மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.

இந்த கஜகேசரி ராஜயோகத்தின் தாக்கம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றங்களையும், நல்ல தொடக்கங்களையும் உருவாக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மனதளவில் தெளிவு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக அந்தஸ்து உயர்வு போன்ற பலன்கள் இந்த காலகட்டத்தில் கிடைக்கப்போகின்றன.

மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் நேரடியாக அவர்களது ராசியிலேயே உருவாகுவதால், மிகச் சிறப்பான பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, புதிய முயற்சிகளில் துணிச்சலுடன் களமிறங்கும் மனநிலை உருவாகும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு முயற்சிகள் வெற்றியடையும். நீண்ட காலமாக தடைபட்டு நின்ற காரியங்கள் மீண்டும் வேகம் பெறும். பணியிடத்தில் ஏற்பட்டிருந்த மன அழுத்தங்கள் குறையும். உங்களை சிரமப்படுத்திய அதிகாரிகள் மாற்றப்படலாம். பேச்சுக்கும் செயலுக்கும் மதிப்பு கூடும்; சமூகத்தில் அந்தஸ்து உயரும்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த கஜகேசரி ராஜயோகம் தன ஸ்தானத்தில் உருவாவதால், பொருளாதார ரீதியாக பெரிய மாற்றம் காணப்படும். வறுமை நீங்கி வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் எதிர்பாராத முன்னேற்றம் ஏற்படும். பழைய முதலீடுகளில் இருந்து திடீர் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். திருமண யோகம் கைகூடும். மனதில் புதிய தெளிவும் உற்சாகமும் பிறக்கும்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் லாப ஸ்தானத்தில் அமைவதால், வருமானம் மற்றும் அங்கீகாரம் தொடர்பான நல்ல செய்திகள் வரக்கூடும். ஆளுமையில் புதிய பிரகாசம் காணப்படும். தன்னம்பிக்கை இரட்டிப்பாகும். பணியிடத்தில் முன்னேற்றம், பாராட்டு மற்றும் மதிப்பு கிடைக்கும். குறிப்பாக ஊடகம், எழுத்து மற்றும் கல்வித் துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் ஒரு பொன்னான யோகமாக அமையும். பொருளாதார நிலையும் கணிசமாக மேம்படும்.

தனுசு ராசிக்காரர்களுக்கு கஜகேசரி ராஜயோகம் ஏழாம் வீட்டில் உருவாகுவதால், திருமணமும் தொழில் கூட்டாண்மைகளும் சிறப்பாக அமையும். வரன் தேடுபவர்களுக்கு நல்ல செய்திகள் வரக்கூடும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடிவடையும். கூட்டாக தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீண்ட காலமாக எதிர்பார்த்த வணிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தேங்கி இருந்த சரக்குகள் விற்றுத் தீர்ந்து, இலாபம் அதிகரிக்கும்.

மொத்தத்தில், பொங்கலுக்குப் பிறகு உருவாகும் இந்த கஜகேசரி ராஜயோகம் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல நேரத்தைத் தொடங்கிவைக்கிறது. பணம், தொழில், உறவுகள் மற்றும் மனநிம்மதி ஆகியவற்றில் நேர்மறையான மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW