குரு-சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!

சுக்கிரன் மே 14ஆம் தேதி மிதுன ராசியில் வியாழனுடன் சேருவதால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இதனால் மிதுனம், சிம்மம், கன்னி ராசிகளுக்கு வேலை, தொழில், நிதி நிலை, குடும்ப மகிழ்ச்சி, எதிர்பாராத பண வரவு எனப் பல அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும் .


குரு-சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம்: மே 14 முதல் இந்த 3 ராசிகளுக்கு பண வரவு அதிகரிக்கும்!

ஜோதிடத்தின்படி, கிரகங்களின் நிலை மாற்றமும் சேர்க்கையும் மனித வாழ்க்கையில் பல விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வகையில், செல்வம், ஆடம்பரம், அழகு, காதல் ஆகியவற்றுக்குக் காரணியான சுக்கிரன், மே 14ஆம் தேதி மிதுன ராசிக்குள் நுழைகிறார்.

ஏற்கனவே, தேவர்களின் குருவான வியாழன் இந்த ராசியில் இருப்பதால், குரு-சுக்கிர சேர்க்கையால் கஜலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் மூன்று ராசிகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக அமையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சமூக மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், நிதி நிலை உயரும், பண வரவு பெருகும்.

மிதுன ராசிக்காரர்களுக்கு முதலாம் வீட்டில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் வேலை, தொழில் முன்னேற்றத்துக்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நிலுவைப் பணிகள் வெற்றியடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும்.

முதலீடுகளில் நல்ல லாபம், எதிர்பாராத நிதி ஆதாயங்கள், குடும்ப மகிழ்ச்சி, திருமணமாகாதோருக்கு நல்ல வரன், பணி தேடுவோருக்கு வேலைவாய்ப்பு எனப் பல நன்மைகள் கிடைக்கும்.

சிம்ம ராசியின் 11ஆம் வீட்டில் கஜலட்சுமி யோகம் உருவாவதால், தொழிலில் முன்னேற்றமும், கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் பாராட்டும் ஆதரவும் கிடைக்கும். நிதி நிலை வலுப்பெறும், காதல் வாழ்க்கை இனிக்கும், புதுமண தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம், ஆராய்ச்சித் துறையில் வெற்றி என சாதகமான பலன்கள் உண்டு.

கன்னி ராசியின் 10ஆம் வீட்டில் உருவாகும் இந்த ராஜயோகத்தால் வியாபாரிகளுக்கு நல்ல லாபமும் புதிய ஒப்பந்தங்களும் கிடைக்கும். நீண்டகாலப் பிரச்சினைகள் தீரும், ஆரோக்கியமும் மன அமைதியும் மேம்படும். தொழிலதிபர்களுக்கு நிதி ஆதாயம், எதிர்பாராத பண வரவு, வெளிநாட்டுப் பயண வாய்ப்பு என பலன்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

(பொறுப்புத் துறப்பு: இக்கட்டுரையில் தரப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் நம்பகத்தன்மைக்கு எந்தவொரு உத்தரவாதமும் இல்லை. எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன் சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.)

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க