அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு

Published on: 28 Jan 2026, 09:53 am

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 14,15,584 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக 11,234,713,750 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

அஸ்வெசும ஜனவரி மாத கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்குகளில் வரவு

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள், அதேபோல் இரு கட்டங்களுக்குமான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவுகள் இன்று (28) அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ் 14,15,584 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக 11,234,713,750 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. அதே கட்டத்தின் ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 6,18,440 பயனாளிகளுக்கு 3,092,200,000 ரூபா வழங்கப்பட உள்ளது.

அதேநேரம், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக 2,48,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500 ரூபா நிதி விநியோகிக்கப்பட்டு வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது. மேலும், இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக 68,183 பயனாளிகளுக்கு 340,915,000 ரூபா அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW