குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் விரைவில் ஆரம்பம்

Published on: 14 Sep 2025, 07:51 pm

எம்மை கூகுளில் பின்தொடரவும்

கூகுள் செய்திகளில் எங்களின் முக்கியச் செய்திகளை உடனுக்குடன் பெற கிளிக் செய்யவும்.

Add as Preferred Source

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குருக்கள்மடம் மனித புதைகுழி அகழ்வுப்பணிகள் விரைவில் ஆரம்பம்

மட்டக்களப்பு குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வாரம் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்காக 29 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

களுவாஞ்சிக்குடி நீதவான் விடுத்த உத்தரவிற்கமைய குருக்கள்மடம் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது.

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பான விசாரணை மற்றும் நிதி ஒதுக்கீடு தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் அறிக்கை விடுத்திருந்தது.

இதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி களுவாஞ்சிக்குடி நீதவானிடம் இது தொடர்பான விசாரணை அறிக்கைகள் சமர்பிக்கப்படவுள்ளதாக அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த அகழ்வுப் பணிகள் தொடர்பான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் ஆராய்வதற்காக கடந்த வியாழக்கிழமை காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரிகள் விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW