வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளது. 970-க்கும் அதிகமானோர் காயமடைந்த நிலையில், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.


வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 164 ஆக உயர்வு

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 164 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய நேரப்படி இன்று அதிகாலை வெனிசுலாவில் ரிக்டர் அளவுகோலில் 7.2 மற்றும் 7.5 அளவிலான இரண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் பதிவாகின. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததுடன், பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என ஆரம்பத்தில் அச்சம் வெளியிடப்பட்டது. தற்போது வரை 164 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 970-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டின் இடைக்கால அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. இடிந்து விழுந்த கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க