சனியின் நட்சத்திர பெயர்ச்சி... எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? உங்க ராசி இதுவா?

சனி பகவான் ஜனவரி 20 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையின் பல துறைகளிலும் நல்ல மாற்றங்களை அனுபவிக்க உள்ளனர்.


சனியின் நட்சத்திர பெயர்ச்சி... எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா? உங்க ராசி இதுவா?

சனி பகவான் ஜனவரி 20 அன்று உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைகிறார். கர்மத்தின் அடிப்படையில் பலன்களை வழங்கும் மிக முக்கியமான கிரகமாகக் கருதப்படும் சனியின் இந்த நட்சத்திர மாற்றம், சில ராசிக்காரர்களுக்கு சிறப்பான முன்னேற்றத்தையும் அதிர்ஷ்டத்தையும் கொண்டு வரவுள்ளது. குறிப்பாக மூன்று ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் வாழ்க்கையின் பல துறைகளிலும் நல்ல மாற்றங்களை அனுபவிக்க உள்ளனர்.

இந்த பெயர்ச்சியின் மூலம் மிதுன ராசிக்காரர்களுக்கு வருமான உயர்வு, வணிக லாபம் மற்றும் தொழில் வளர்ச்சி போன்ற சாதகமான பலன்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரித்து, வேலை தேடுபவர்கள், வேலை மாற்ற நினைப்பவர்கள் மற்றும் அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உருவாகும். எதிர்பார்த்த முயற்சிகள் பலிக்கும் காலமாக இது அமையும்.

கடக ராசிக்காரர்களுக்கு சனியின் உத்திரட்டாதி நட்சத்திர பெயர்ச்சி மிகவும் நன்மை தரும் ஒன்றாக இருக்கும். நீண்ட நாட்களாக மனதை வருத்திய பிரச்சனைகள் தீர்வை காணும். தடைபட்டு நின்ற பணிகள் மீண்டும் வேகமெடுக்கும். பணியிடத்தில் நல்ல பெயரும், மேலதிகாரிகளின் பாராட்டும் கிடைக்கும். பதவி உயர்வு அல்லது பொறுப்புகள் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது. சமூகத்தில் அந்தஸ்தும் மரியாதையும் உயரும். வீடு, நிலம் அல்லது வாகனம் வாங்கும் யோகமும் ஏற்படக்கூடும். மொத்தத்தில், இந்த காலம் கடக ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரும்.

மகர ராசிக்காரர்களுக்கு இந்த பெயர்ச்சி ஒரு முன்னேற்ற காலமாக அமையும். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரித்து, வருமானம் உயர்வதற்கான வழிகள் உருவாகும். கூடுதல் வருமானம் கிடைப்பதால் நிதி நிலைமை மேம்பட்டு சேமிப்புகள் அதிகரிக்கும். தொழில் செய்பவர்களுக்கு லாபம் பெருகும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் சூழ்நிலை உருவாகும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள Seithi WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW
Stay informed on all the latest news, real-time breaking news updates, and follow all the important headlines in india news and world news on Seithi.
Seithi-ஐ கூகுள் செய்திகளில் விருப்பமான தளமாக சேர்க்கவும்
கூகுளில் விருப்பமான
செய்தி தளமாக சேர்க்க